என் மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டார்.. அவர்தான் கொலையாளி.. கதறும் சுஷாந்தின் தந்தை!

சென்னை: என் மகனுக்கு விஷம் கொடுத்து ரியா சக்ரவர்த்தி கொன்றுவிட்டார் என சுஷாந்தின் தந்தை கூறியுள்ளார்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி, அவருக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுத்து வந்தது அவரது வாட்ஸ் அப் மெஸேஜ்கள் மூலம் தெரிய வந்தது.

அம்பலமான சதி

அம்பலமான சதி

30 நிமிடத்திற்கு ஒரு முறை என சுஷாந்துக்கு போதை மருந்துகளை கொடுத்து ரியா அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர் குற்றச்சாட்டு

வழக்கறிஞர் குற்றச்சாட்டு

சுஷாந்துக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை அளவுக்கு அதிகமாக கொடுத்ததுதான் அவரது மரணத்திற்கு வழி வகுத்தது என்று சுஷாந்தின் வழக்கறிஞரான விகாஸ் சிங் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இது பெரிய குற்றம் என்றும் கூறியிருந்தார்.

கைது செய்ய வேண்டும்

கைது செய்ய வேண்டும்

இந்நிலையில் சுஷாந்தின் தந்தையான கேகே சிங் தனது மகனின் மரணம் குறித்து விசாரிக்கும் சிபிஐ, ரியா சக்ரவர்த்தியை "கைது செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், நடிகை ரியா சக்ரவர்த்திதான் தனது மகனை தற்கொலைக்குத் தூண்டினார் என்றும் தனது மகனை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

விஷம் கொடுத்து கொலை

விஷம் கொடுத்து கொலை

தற்போது ரியா சக்ரவர்த்திதான் தனது மகனை கொன்ற கொலைக்காரி என்று கூறியுள்ளார். ரியா சக்ரவர்த்தி நீண்ட காலமாக தனது மகன் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து, அவரை கொன்று விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விசாரண முகமை ரியா சக்ரவர்த்தியையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஸ்டடியில் வைக்க வேண்டும்

கஸ்டடியில் வைக்க வேண்டும்

மேலும் நடிகர் சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங் கீர்த்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது சகோதரரின் கொலை குற்றவாளிகள் உடனடியாக காவலில் வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ஏன் இத்தகைய கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள்... எந்த தண்டனையும் இல்லாமல் நகர்கிறார்கள்??? எனக்கு ஒரு பதில் தேவை!! அவர்களை உடனடியாக காவலில் வைக்க வேண்டும்!! என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X