அமானுஷ்ய சக்திகள் பற்றிய நினைவுகளை சுஷாந்தின் தலையில் நிரப்பினார் ரியா.. பகீர் கிளப்பும் தோழி!
சென்னை: ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் தலையில் அமானுஷ்ய சக்திகள் பற்றிய நினைவுகளை நிரப்பியிருந்தார் என இருவருக்கும் நெருக்கமான தோழி ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உச்சநீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிபிஐ அசிகாரிகள் சுஷாந்த் மரணம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிபிஐ விசாரணை
முதற்கட்டமாக சுஷாந்த் வீட்டின் சமையல் காரரான நீரஜ் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுஷாந்தின் நெருங்கிய நண்பரான சித்தார்த் பிதானி மற்றும் நீரஜிடம் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான உறவு
இந்நிலையில் சுஷாந்துக்கும் அவரது காதலியான ரியா சக்ரவர்த்திக்கும் மிகவும் நெருக்கமான தோழி ஒருவர் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் மறைந்த நடிகர் சுஷாந்துக்கும் அவரது காதலியான ரியா சக்ரவர்த்திக்கும் இடையிலான உறவு வித்தியாசமானதாக இருந்தது என கூறியுள்ளார்.

அதைப்பற்றிய நினைவுகள்
மேலும் ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் தலையில் முழுக்க முழுக்க அமானுஷ்ய சக்திகள் பற்றிய நினைவுகளையே நிரப்பியிருந்தார். அவருடைய நிதி தொடர்பான விஷயங்களையும் அவருடைய வாழ்க்கையையும் ரியா சக்வர்த்திதான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.

அடிக்கடி பார்ட்டி
சுஷாந்த் தனது பாந்த்ரா வீட்டில் அடிக்கடி பார்ட்டி வைப்பார் என்றும் அதில் அடிக்கடி தான் பங்கேற்றிருப்பதாகவும் கூறியுள்ள, அந்த தோழி ரியா சக்ரவர்த்திக்கும் சுஷாந்துக்கும் இடையிலான உறவு, ஒரு நார்மலான ஜோடியை போன்று இல்லாமல் ஏதோ வித்தியாசமானதாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

சுஷாந்துக்கு மருந்துகள்
மேலும் டாக்டரான ரியா சக்ரவர்த்தியின் தந்தைதான் சுஷாந்துக்கு தொடர்ந்து மருந்துகளை வழங்கி வந்தார் என்றும் கூறியுள்ளார். சுஷாந்த் மரண வழக்கில் நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது தோழியின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்பிரீட்சுவல் ஹீலர்
ஏற்கனவே ரியா சக்ரவர்த்தி மாந்த்ரீகத்தை பயன்படுத்திதான் சுஷாந்தை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேநேரத்தில் மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தை குணப்படுத்த அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி தன்னை அணுகியதாக ஸ்பிரீட்சுவல் ஹீலர் மோகன் சாதஷிவ் ஜோஷி அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











