சுஷாந்த் சிங் வழக்கு.. நடிகை ரியாவின் சகோதரர், மானேஜர் அதிரடி கைது.. பாலிவுட்டில் பரபரப்பு!

By

மும்பை: சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியாவின் சகோதரரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார்.

சி.பி.ஐ. விசாரணை

சி.பி.ஐ. விசாரணை

அதில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது. இந்நிலையில் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

வாட்ஸ்அப் உரையாடல்

வாட்ஸ்அப் உரையாடல்

பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்தது. அமலாக்கத்துறையின் விசாரணையின் போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

போதைப்பொருள்

போதைப்பொருள்

இந்தநிலையில் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பாஸ் லக்கானி, கரன் அரோரா ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப் பொருள்களை விற்கும் ஜாயித் விலத்ரா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரையும் கைது செய்து விசாரித்தனர்.

ரியாவின் சகோதரர்

ரியாவின் சகோதரர்

இந்நிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சுஷாந்த் சிங்கின் மானேஜர் சாமுவேல் மிரண்டாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். பிறகு இருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று இரவு திடீரென கைது செய்தனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X