டீயில் 4 சொட்டு.. 30 நிமிடங்களுக்கு ஒரு முறை.. சுஷாந்த்துக்கு போதை மருந்து கலந்து கொடுத்தாரா ரியா?

மும்பை: சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திடுக்கிடும் திருப்பமாக நடிகை ரியா சக்கரவர்த்தி, சுஷாந்துக்கு தெரியாமல் டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக ரியாவின் டெலிட் செய்யப்பட்ட வாட்ஸப் சாட் மூலம் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் உடனடியாக ரியா சக்கரவர்த்தியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என #RheaDrugChat என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடரும் ஹாஷ்டேக் போராட்டம்

தொடரும் ஹாஷ்டேக் போராட்டம்

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் உயிரிழந்த நாள் முதல், அவரது மரணத்தில் மரணம் இருப்பதாகவும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சுஷாந்த் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து தினமும் பலவித ஹாஷ்டேக்குகளை பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரியா தான் டார்கெட்

ரியா தான் டார்கெட்

ஜலேபி, ஹாஃப் கேர்ள் பிரெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரியா சக்கரவர்த்தி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கை காதலித்து வந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்ததும், அது தற்கொலை அல்ல, சிபிஐ விசாரணை வேண்டும் என முதல் ஆளாக கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், தற்போது அவர் தான் முக்கிய டார்கெட்டாக மாறி உள்ளார்.

வசமாக சிக்க வைக்கும் வாட்ஸப்

வசமாக சிக்க வைக்கும் வாட்ஸப்

நடிகை ரியா சக்கரவர்த்தி இயக்குநர் மகேஷ் பட்டை தொடர்பு கொண்டது முதல், தற்போது போதை மருந்து கும்பல் வரை அவருக்கு தொடர்பு இருப்பதாக, டெலிட் செய்யப்பட்ட அவரது வாட்ஸப் சாட்களை தோண்டி துருவி எடுத்து வருகின்றனர். சுஷாந்துக்கு எப்படி போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சியான தகவலும் தற்போது லீக்காகி உள்ளது.

டீயில் கலந்து

டீயில் கலந்து

ஜெயா சாஹா என்பவர், குடிக்கிற டீயில் 4 சொட்டுகள் கலக்க வேண்டும் என்றும், 30 முதல் 40 நிமிடத்திற்கு சுஷாந்தை அதை குடிக்க வைக்க வேண்டும் என ரியாவுக்கு அனுப்பியுள்ள வாட்ஸப் சாட் தகவல் தான் தற்போது பாலிவுட்டில் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த தகவல் தீயாய் பரவியவுடன் #RheaDrugChat என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து, ரியாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

மன அழுத்தம் இல்லை

மன அழுத்தம் இல்லை

மேலும், சமீபத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஏற்க முடியாது என மருத்துவர்கள் சிலர் கூறியிருப்பதும் இந்த மரண விவகாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையையும் சந்தேகத்தையும் உருவாக்கி உள்ளது. சிபிஐ அதிகாரிகள் விரைவில் ரியாவிடம் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X