எல்லாம் நல்ல விஷயம் தான்.. தாத்தாவாக போகும் ரியாஸ் கான்..ஷாரிக் சொன்ன குட் நியூஸ்!

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன் மரியா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜாலியாக இணையத்தில் வலம் வந்த இந்த ஜோடி தற்போது நல்ல செய்தி ஒன்றை அறிவித்துள்ளனர். இதைப்பார்த்த பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக கலக்கி வருபவர் ரியாஸ் கான். இவர், நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் பென்சில், டான் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.

shariq hassan Maria haasan

காதல் திருமணம்: ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. மரியா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஷாரிக்கை விட பெரியவள்: திருமணத்திற்கு பிறகு ஷாரிக் மற்றும் மரியா இருவரும் பல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். அதில், பேசிய மரியா, ஷாரிக்கை நான் ஜிம்மில் தான் சந்தித்தேன், நான் ஷாரிக்கைவிட பெரியவள் என்பதால், அவர் என்னிடம் காதலை சொன்ன போது நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் சிங்கிள் மதராக கஷ்டப்பட்டு என் மகளை வளர்ந்து வந்தேன், இதனால், எனக்கு என் மகள் தான் முக்கியமாக தெரிந்தது. இதனால் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. வருபவர் என் மகளை ஏற்றுக்கொள்வாரா என்ற பயம் இருந்தது. ஆனால், என் மகளை ஷாரிக் ரொம்ப நன்றாக பார்த்துக்கொண்டார். அதைப்பார்த்துத்தான் எனக்கு இவர் மீது காதல் வந்தது.

முதலில் பயந்தேன்: ஷாரிக் மட்டும் இல்லை அவரது அப்பா , அம்மாவும் என் மகளை பேத்திப்போல நன்றாக பாசத்தோடு பார்த்துக்கொள்கிறார்கள். எங்க ஷாப்பிங் போனாலும், அவளையும் கூட்டித்தான் போகிறார்கள். இத்தனை வருஷமா நீ ஜாராவை கஷ்டப்பட்டு வளர்த்துட்ட இனிமேல் அவளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இப்போ தான் அந்த பயமே போச்சு என்று மரியா, ஷாரிக் நல்ல கணவராக மட்டுமில்லாமல் நல்ல அப்பாவாகவும் இருக்கிறார் என்று மாயா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

குவியும் வாழ்த்து: இந்நிலையில், ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது காதல் மனைவி மரியா கர்ப்பமாக இருக்கும் நல்ல விஷயத்தை வீடியோவாக பதிவிட்டு Our love story just got a new chapter என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் பலர் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரியாஷ் கான் சார் தாத்தாவாகிவிட்டார் அவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X