பாலியல் வழக்கில் என் பெயரை இழுப்பதா..? நடிகை பாயல் கோஷூக்கு எதிராக மற்றொரு நடிகை அவதூறு வழக்கு!

By

மும்பை: பாலியல் வழக்கில் தன் பெயரை இழுத்தற்காக நடிகை பாயல் கோஷ் மீது, நடிகை ரிச்சா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை பாயல் கோஷ்.

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

அனுராக் காஷ்யப் தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்திப் பட இயக்குனரான இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

ஷோபாவில் தள்ளி

ஷோபாவில் தள்ளி

இவர் மீது பாயல் கோஷ் கூறிய பாலியல் புகாரில், 'படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றும் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறும் அழைத்தார் அனுராக் காஷ்யப். இரவு 7.30 மணிக்கு காஷ்யப் வீட்டுக்குச் சென்றேன். தனியறைக்கு அழைத்துச் சென்றார். திடீரென்று ஷோபாவில் தள்ளி, என் வாயை அழுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு தப்பி வீட்டுக்கு வந்தேன் என்று கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இதை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். இதுபற்றி மும்பை போலீசில் புகார் கொடுத்தார் பாயல் கோஷ். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நாளில் இந்தியாவிலேயே இல்லை என்றும் இலங்கையில் இருந்ததாகவும் கூறினார்.

தனுஶ்ரீ தத்தா

தனுஶ்ரீ தத்தா

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப்பால் பாதிக்கப்பட்டதாக ரிச்சா சதா, மஹி கில், நடிகை ஹூமா குரேஸி உள்பட சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த நடிகைகள் தங்கள் மீதான புகாரை மறுத்திருந்தனர். அதோடு, அனுராக் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

இந்நிலையில் நடிகை ரிச்சா சதா, அனுராக் காஷ்யப் விவகாரத்தில் தனது பெயரை தேவையில்லாமல் இழுத்ததற்காக, நடிகை பாயல் கோஷ் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு நஷ்ட ஈடாக அவர், ரூ.1.1 கோடி கேட்டுள்ளார். சினிமா விமர்சகர், கமால் ஆர் கான் மீதும் அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X