ஷகீலா டிரெய்லர் ரிலீஸ்.. ஆபாச பட நடிகையாக அசத்தி இருக்கிறார் ரிச்சா சதா.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
மும்பை: ஆபாச பட நடிகை ஷகீலாவின் பயோபிக் டிரெய்லர் வெளியாகி இளைஞர்களை திணறடித்து வருகிறது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறூ டர்ட்டி பிக்சர் என்கிற பெயரில் பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை தட்டிச் சென்றது.
இந்நிலையில், அதே போன்ற ஒரு முயற்சியாக ரிச்சா சதா நடிப்பில் ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு ஷகீலா எனும் டைட்டிலேயே ரிலீசாக உள்ளது.

ஆபாச பட நடிகை
காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷகீலா. பின்னர் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவே மாறினார். சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சியில் இந்திய அளவில் பிரபலமானவர் ஷகீலா தான்.

ஷகீலாவாக
ஆடைகளே இல்லாமல் வெறும் நகைகளை மட்டுமே அணிந்தபடி வெளியான ரிச்சா சதாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சையை கிளப்பி டிரெண்டானது. சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகீலாவுக்கு எல்லாம் ஏன் பயோபிக் பண்றீங்கன்னு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது ஷகீலா படம் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது.

டிரைலர் ரிலீஸ்
இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ரிச்சா சதா மற்றும் ராஜீவ் பிள்ளை நடிப்பில் உருவாகியுள்ள ஷகீலா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சில்க் ஸ்மிதா இறந்ததற்கு பிறகு அந்த இடத்தை ஷகீலா நிரப்பியதாக இந்த படத்தின் டிரைலரின் ஆரம்பத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்னொரு டர்ட்டி பிக்சர்
ஷகீலா படத்தின் டிரெய்லரை பார்த்தால், அப்படியே இன்னொரு டர்ட்டி பிக்சர் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது. வித்யா பாலன் நடிப்பில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்காக உருவான அந்த படம் வேற லெவல் ஹிட்டானது. நடிகை பாலிவுட் நடிகை ரிச்சா சதா, அப்படியே ஆபாச நடிகை போலவே இந்த படத்திற்காக மாறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்
ஷகீலா படத்தின் டிரைலர் வெளியான நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று திரையரங்கில் இந்த படம் ரிலீசாகும் என்கிற அசத்தலான அறிவிப்பும் வெளியாகி இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு தியேட்டரில் இரண்டாம் குத்து வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஷகீலா படம் ரிலீசாக போகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்
1990களில் ஆபாச பட நடிகையாக மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கலக்கிய நடிகை ஷகீலா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்று, ருசியான சமையல்களை சமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











