TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
வெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்!
சென்னை: நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். பின்னர் டெல்லிக்கு வந்து மாடலிங் செய்து வந்தார்.

2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலம் தான் இந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தனுஷ், சிம்பு என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.
இதனால், நடிப்பில் இருந்து ஒதுங்கிய எம்பிஏ பட்டதாரியான ரிச்சா, வர்த்தக கல்வி நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் இருக்கிறார். இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துக்கு தொடர்புடைய ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக ரிச்சா அறிவித்துள்ளார்.
Just wanted to share that I am engaged ❤! Joe and I met in business school and it has been two wonderful years! Looking forward to the next phase of my life. Wedding date not set yet!😊 pic.twitter.com/7ozwry8Zg9
— Richa Gangopadhyay (@richyricha) January 15, 2019
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜோவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். இப்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.