Richard Rishi - அஜித் மச்சானுக்குள் இவ்வளவு பெரிய சோகமா?.. கண்ணதாசன் குடும்பத்தால் தேவதாஸ் நிலைமை?

சென்னை: Richard Rishi (ரிச்சர்ட் ரிஷி) அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு காதல் தோல்வி ஒன்று நடந்ததாகவும் அதன் காரணமாகத்தான் இவ்வளவு நாட்கள் சிங்கிளாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் மனைவி ஷாலினி முன்னணி நடிகையாக இருந்தவர். தனது கரியரில் உச்சத்தில் இருக்கும்போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற தம்பியும் இருக்கின்றனர். ஷாமிலி அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் அடைந்தவர். அதேபோல் ஹீரோயினாக வீர சிவாஜி என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துவிட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

Richard rishi Had a love failure and that is the reason for he is a single

திரௌபதி: ரிச்சர்ட் ரிஷியும் சிறு வயது முதலே நடித்துவந்தாலும் பெரிதாக அவர் அடையாளப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்தில் நடித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ஹிட்டானதோ இல்லையோ சர்ச்சையை சம்பாதித்தது. இதன் காரணமாக அந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்தார் ரிச்சர்ட் ரிஷி. இருப்பினும் மற்ற இயக்குநர்கள் அவரை வைத்து படம் இயக்க முன்வரவில்லை.

ருத்ரதாண்டவம்: இதனையடுத்து திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் தொல்.திருமாவளவனையும் நேரடியாக தாக்கி பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்ததாக பலர் கூறினர். இந்தப் படமும் படுதோல்வியையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததும் மோகன் ஜிதான்: எப்படியாவது முன்னணி இயக்குநர்கள் கதையில் நடித்துவிட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கும் ரிச்சர்ட்டுக்கு அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அவரது அடுத்த படத்தையும் ரிச்சர்ட்டின் ஆஸ்தான இயக்குநரான மோகன் ஜியே இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் மோகன் ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

காதல் முறிவு: இந்நிலையில் பாடலாசிரியர் கண்ணதாசனின் பேத்தியான சத்யலட்சுமி என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து நின்றுவிட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, சத்யலட்சுமியின் தந்தையும், நடிகர் ரிச்சர்ட்டின் தந்தையும் குடும்ப நண்பர்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் ஆரம்பித்த பழக்கம் காதலாக மாறியதன் காரணமாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருந்திருக்கிறது.

Richard rishi Had a love failure and that is the reason for he is a single

நிச்சயதார்த்தம்: அதன்படி, கடந்த 2012ஆம் ஆண்டு ரிச்சர்ட் ரிஷிக்கும், சத்யலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது நிச்சயதார்த்தத்தை அஜித் முன்னின்று நடத்தியிருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பின் ரிச்சர்டுக்கும், சத்யலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தெரிகிறது. எனவேதான் ரிச்சச்ர்ட் சிங்கிளாக இருந்துவந்ததாக பேச்சு எழுந்திருக்கிறது

யாஷிகாவுன் காதல்: முன்னதாக, ரிச்சர்ட் ரிஷி நடிகை யாஷிகா ஆனந்த்தை காதலித்துவருவதாக கூறப்பட்டது. இந்தப் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்போதே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா ஆனந்த் தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். அதனையடுத்து இருவரும் நார்மலாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X