” என்னப்போய் சாதி வெறியன்னு ஊரெல்லாம் பேச வச்சு”; வெளியானது ருத்ர தாண்டவம் டிரைலர்!
சென்னை: திரெளபதி படத்தை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் படத்தின் அதிரடியான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
திரெளபதி படத்தில் நாயகனாக நடித்த தல அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி இந்த படத்திலும் ஹீரோவாக மிரட்டி உள்ளார்.
அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

நாடக காதல்
சமூகத்தில் நடக்கும் நாடக காதலை அம்பலப்படுத்தும் விதமாக திரெளபதி எனும் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் மோகன் ஜி. அந்த படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. திரெளபதி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 18 நாட்களே ஓடிய நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டதால் பின்னர் அமேசான் பிரைம் மற்றும் விஜய் டிவியில் அந்த படம் ஒளிபரப்பானது.

ருத்ர தாண்டவம்
திரெளபதி படத்தில் நாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் தான் ருத்ர தாண்டவம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார். கெளதம் மேனன், ராதாரவி, தம்பி ராமைய்யா என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சாதி வெறியன்
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படத்திற்கு சினிமா துறையிலே சில இயக்குநர்கள் நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும், அவரை ஜாதி வெறி இயக்குநர் என்றும் பச்சைக் குத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ருத்ர தாண்டவம் டிரைலரில் அதே வசனத்தை வைத்தே பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன்.

கையில் விலங்குடன்
ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைப்படுகிறது என போலீஸ் அதிகாரி கையில் விலங்குடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு டிரைலர் அறிவிப்பை இயக்குநர் மோகன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள காரசாரமான டிரைலர் என்ன என்ன சர்ச்சைகளை கிளப்பும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆபாச வசனங்கள்
இயக்குநர் கெளதம் மேனன் இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். வெப் தொடர்கள், படங்கள் என கெளதம் மேனன் வாயை திறந்தாலே ஆபாச வசனங்கள் வந்து விழுவதை போலவே இந்த படத்தின் டிரைலரிலேயே அத்தனை ஆபாச வசனங்களும் வந்து விழுகின்றன.

கர்ணனுக்கு போட்டியா
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் கையில் விலங்குடன் இருப்பதை போலவே இதில், ரிச்சர்ட் ரிஷி போலீஸ் அதிகாரியாக இருந்து கையில் விலங்குடன் காட்சியளிக்கிறார். அந்த முள் வசனமும் கர்ணன் படத்தையே குறிக்கிறதா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
பெரிய கேஸ்
ஜாதிய பிரச்சனைகளை ஏகப்பட்ட ஓப்பன் வசனங்கள் மூலமாக டிரைலர் முழுக்க தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெளிவாக ஆணித்தரமாக ராதராவி, கெளதம் மேனன், தர்ஷா குப்தா மற்றும் தம்பி ராமைய்யா பேசும் வசனங்களிலேயே தெரிகிறது. இது ரொம்ப பெரிய கேஸ்னு ராதாரவி சொல்வதை வைத்து பார்த்தால் படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது. இந்த ஆண்டே தியேட்டரில் ருத்ர தாண்டவம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











