Shalini Ajith: குழந்தைகள் தினத்தை ஷாலினி அஜித் யாருடன் கொண்டாடி இருக்காங்க பாருங்க.. செம பிக்!

சென்னை: நவம்பர் 14ம் தேதியான இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பெரிதாக குழந்தைகள் தினத்துக்கு எல்லாம் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். இந்நிலையில், ஷாலினியின் சகோதரர் சூப்பரான குழந்தைகள் தின வாழ்த்து போஸ்ட்டை வெளியிட்டுள்ளார்.

குழந்தை பருவத்தில் இருந்தே நடிகை ஷாலினி, சகோதரி ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி உள்ளிட்ட மூவரும் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர்.

Richard Rishi shares pic with Shalini Ajith and Shamli and says Happy Childrens Day

குழந்தை நட்சத்திரம்: 1983ம் ஆண்டு என்டே மாமாட்டு குட்டி அம்மாக்கு எனும் மலையாள படத்தின் மூலம் நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதே ஆண்டில் தமிழில் ஆனந்த கும்மி படத்திலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஷாலினியை போலவே ஷாமிலி மற்றும் ரிச்சர்ட் ரிஷி என தம்பி, தங்கை இருவருமே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளனர்.

அஜித் மனைவி: நடிகையாக காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என பல படங்களில் நடித்த ஷாலினி அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது அஜித்துடன் ஏற்பட்ட காதல் காரணமாக 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். அனோஷ்கா எனும் பெண் குழந்தையும், ஆத்விக் எனும் ஆண் குழந்தையும் இந்த நட்சத்திர ஜோடிக்கு உள்ளனர்.

Richard Rishi shares pic with Shalini Ajith and Shamli and says Happy Childrens Day

திருமணம் செய்யவில்லை: ஆனால், ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் தம்பி ரிச்சர்ட் ரிஷி இருவரும் பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. அக்கா திருமணம் ஆகி வெற்றிகரமாக வாழ்ந்து வரும் நிலையிலும் தங்கையும் தம்பியும் திருமணத்தை பற்றி ஏன் யோசனை செய்யவில்லை என்கிற கேள்வி அவ்வப்போது எழத்தான் செய்கிறது.

இப்பவும் குழந்தைங்க தான்: இந்நிலையில், வயதானாலும், நாங்கள் மூவரும் இன்றும் குழந்தைகள் தான் என ரிச்சர்ட் ரிஷி தனது சகோதரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே என கேப்ஷன் போட்டு வாழ்த்து சொல்லி உள்ளார். என்ன அந்த குழந்தைகளுக்கு 40 பிளஸ் வயசு இருக்குமா? என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X