Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பந்தாவே இல்லாத நடிகர் நிவின் பாலி: ஷ்ரத்தா ஸ்ரீநாத்
Recommended Video
சென்னை: நல்ல கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை படத்துக்கு படம் நிரூபிக்கும் எந்த ஒரு நடிகரும் வேகமாக வளர்வதை யாராலும் தடுக்க முடியாது. நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் 'ரிச்சி' படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தில் நிவினுடன் நட்ராஜும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நிவினுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனது வசீகர புன்னகையாலும், திறமையான நடிப்பாலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
'ரிச்சி' குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில், '' தமிழிற்கும் , தமிழ் நாட்டிற்கும் இதற்கு முன்பு எந்த தொடர்பும் இல்லாத, எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத எனக்கு இதுவரை அமைந்துள்ள சினிமா பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இயக்குனர் கவுதமிற்காக தான் 'ரிச்சி' படத்தை முதலில் ஒப்புக்கொண்டேன். அவரது தொழில் அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது.
நான் சந்தித்துள்ள நடிகர்களில், மிகவும் அர்ப்பணிப்போடும், எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. சக நடிகராகவும், நண்பராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் மறுபடியும் பணிபுரிய ஆவலோடுள்ளேன். இப்படத்தின் எனது கதாபாத்திரத்தின் பெயர் 'மேகா'. ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் இது. தனது கருத்துக்களில் உறுதியாகவும், தான் நம்பும் விஷயங்களுக்கு போராடும் குணமுள்ள கதாபாத்திரம் இது. 'ரிச்சி' படத்தின் கதை சொல்லும் முறை மிகவும் வித்யாசமாக இருக்கும். இது ஒரு புது வித சினிமாவாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் ''
'ரிச்சி' படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தை 'Cast N Crew' நிறுவனம் சார்பில் ஆனந்த் குமார் மற்றும் வினோத் ஷோர்னுர் தயாரித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், பாண்டி குமார் ஒளிப்பதிவில் 'ரிச்சி' உருவாகியுள்ளது. நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமான 'ரிச்சி' படத்தை 'Trident Arts' ரவீந்திரன் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.