»   »  டேஷ் மற்றும் டேஷ் டேஷ்..! - 'ரிச்சி' ட்ரெய்லர் இதோ!

டேஷ் மற்றும் டேஷ் டேஷ்..! - 'ரிச்சி' ட்ரெய்லர் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மலையாளத்தில் முன்னணி நடிகராகியிருக்கும் நிவின் பாலி நடித்திருக்கும் நேரடித் தமிழ்ப் படமான 'ரிச்சி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகி இருக்கிறது.

'ப்ரேமம்' படத்தில் நடித்ததற்குப் பிறகு நிவின் பாலிக்கு தமிழிலும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். 'நேரம்' படத்தை அடுத்து நிவின் பாலி மீண்டும் நேரடியாக நடித்துள்ள தமிழ்ப்படம் தான் 'ரிச்சி'.

மிஷ்கினின் உதவி இயக்குநரான கௌதம் ராமச்சந்திரன் 'ரிச்சி' படத்தை இயக்கியுள்ளார். நிவின் பாலியோடு இன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க வேட்டை' ரேர் பீஸ் நட்டி நடித்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

'விக்ரம் வேதா'வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் 'லட்சுமி' குறும்படம் புகழ் லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜும், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் 'ரிச்சி' படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.

தூத்துக்குடி ரௌடி

தூத்துக்குடி ரௌடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலியும், படகுகளைச் சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜும் நடித்துள்ளனர். வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு படம் முழுவதும் டெரரான ரௌடியாக வருகிறார் நிவின் பாலி.

டிசம்பர் 8 ரிலீஸ்

டிசம்பர் 8 ரிலீஸ்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் கடந்த மே மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் நாயகி ஷ்ரத்தா ஶ்ரீநாத் முதலில் கமிட் ஆனது இந்தப் படத்தில் தான். 'ரிச்சி' படம் வெளியாவதற்குள் இவர் நடித்து மூன்று படங்கள் வெளிவந்துவிட்டன.

ட்ரெய்லர் வெளியானது

'ரிச்சி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் சற்று முன்பு வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது 'ரிச்சி'. இந்தப் படத்திற்கு அஜனீஷ் இசையமைத்திருக்கிறார். ட்ரெய்லரிலேயே பின்னணி இசை கலவரப்படுத்துகிறது.

ரிச்சி - கதை

ரிச்சி - கதை

லோக்கல் டானாக வலம்வரும் நிவின் பாலியிடம் பேட்டி எடுக்கச் செல்கிறார் பத்திரிகை நிருபர் ஷ்ரத்தா ஶ்ரீநாத். நிவின் பாலி சொல்லும் கதைகளை வைத்து அவர் எழுதும் க்ரைம் த்ரில்லர் தொடர் தான் படம். நிவின் பாலிக்கு இந்தப் படம் கோலிவுட்டிலும் நல்ல இடத்தைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறார்.

English summary
The film 'Richie' will be released on December 8, which film was lead by Nivin pauly, Rare piece Natraj, Shradda Srinath and 'Lakshmi' short film fame 'Lakshmi Priya'. 'Richie' official trailer out now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil