'லட்சுமி' குறும்பட ஹீரோயின் நிவின்பாலியுடன் நடித்திருக்கும் 'ரிச்சி'! - ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை : 'ப்ரேமம்' படத்தில் நடித்ததற்குப் பிறகு நிவின் பாலிக்கு தமிழிலும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். 'நேரம்' படத்தை அடுத்து நிவின் பாலி மீண்டும் நேரடியாக நடித்துள்ள தமிழ்ப்படம் தான் 'ரிச்சி'. மிஷ்கினின் உதவி இயக்குநரான கௌதம் ராமச்சந்திரன் 'ரிச்சி' படத்தை இயக்கியுள்ளார்.
'விக்ரம் வேதா' ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் 'லட்சுமி' குறும்படம் புகழ் லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க வேட்டை' ரேர் பீஸ் நட்டி நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜும், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலியும், படகுகளைச் சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜும் நடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் கடந்த மே மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











