twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹவுஸ்புல் காட்சிகளாக டிஜிட்டல் ரிக்சாக்காரன் - மக்களை கவர்ந்த எம்ஜிஆர்

    By R VINOTH
    |

    சேலம்: வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, இருந்தாலும் மக்களின் மனதில் இன்றைக்கும் என்றைக்கும் குடியிருக்கும் எம்.ஜி.ஆரோட படத்த இப்பவும் சின்ன பசங்க மொதக்கொண்டு பெருசுங்க வரைக்கும் பாக்குறாங்கங்குறது ரொம்ப அதிசயமான ஆச்சரியம் தான்.

    சேலம் அலங்கார் தியேட்டர்ல போன ஜூலை மாசம் 26ஆம் தேதியன்னிக்கு நம்ம மக்கள் திலகம், எம்.ஜி.ஆரோட ரிக்சாக்காரன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துல ரிலீசானது. டெய்லி 4 ஷோன்னு கடந்த ஒரு வாரமாக ஹவுஸ்ஃபுல்லா ஓடி செம வசூலானது. அதுக்கப்புறமா, இப்போ சேலம் சரஸ்வதி தியேட்டர்லயும் டெய்லி 4 ஷோவும் ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கு.

    Rickshawkaran Moie re-released and running successfully

    இன்னிக்கு ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா டெக்னாலஜி வந்துகிட்டே இருக்கு. இப்ப இருக்குற சினமா ட்ரெண்டுல பெரிய பெரிய ஹீரோ நடிச்ச படமெல்லாம் வந்த சுவடு தெரியாம போயி முடங்கிப் போயிடுது. அதிகபட்சமா ஒரு வாரம் ஓடுனாலே அதுங்களுக்கு வெற்றி விழான்னு கொண்டாடுறாங்க.

    இந்த இக்கட்டான நெலமையிலும் கூட, நம்ம புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இத்தன வருஷம் கழிச்சும் கூட இன்னமும் ரசிகர்களை ஈர்க்குறத (Centers Increase) பாக்கும்போது ரொம்ப ரொம்ப ஆச்சரியம்தான். உண்மையிலேயே எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான்.

    அந்தக் காலத்துல நம்ம புரட்சித் தலைவர் நடிச்ச படம்னாலே பொதுவாவே ரிலீஸான மினிமம் 150 நாள்ல இருந்து 200 அல்லது 300 நாள் வரைக்கும் செமயா ஓடும். அதலயும் பெரிய சிட்டிகள்ல ஓடுற படத்த பாக்குறதுக்கு 20 மைல் 30 மைல் தூரத்துல இருந்து சைக்கிள்ல டபுள்ஸ் அடிச்சி வந்து படத்த பாப்பாங்க.

    இத்தன வருஷம் ஆகியும் கூட அவருக்கு மக்கள் மத்தியில இருக்குற அந்த ஈர்ப்பு அப்பிடியே தான் இருக்குங்குறதுக்கு ஒரு சின்ன சாம்பிள்தான் இந்த ரிக்சாக்காரன் படம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் வயசு ஆகல, அவங்களோட ரசனைக்கும் வயசு ஆகலைங்குறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜீத், தளபதி விஜய் இவங்களோட படம் போலவே இன்னிக்கும் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மாலை மரியாதையோட பாலாபிஷேகம் பண்றதும், கட்அவுட் வைச்சி கொண்டாடுறதும், சான்சே இல்லங்க. நம்ம வாத்தியார் வாத்தியார் தான்.

    எம்.ஜி.ஆர் படங்க எல்லாமே பக்கா யூ சர்டிஃபிகேட் படங்குறதால, எல்லாருமே குடும்பம் குடும்பமா வந்து படத்த பாக்குறாங்க. இந்தப்படமும் அதுல சேரும்.

    இதுல இன்னோரு ஆச்சரியமான விசயம் என்னன்னா, ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்கன்னு கூட்டம் கூட்டமா வந்து படத்த பாத்து எம்.ஜி.ஆர் பாட்டுக்கு பாடி டான்ஸ் சும்மா பட்டைய கௌப்புறாங்க. படத்த பாத்துட்டு தியேட்டர விட்டு வெளியில வர்றப்ப மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு.

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அப்பிடிங்குறதுக்கு இது ஒரு சின்ன சாம்பிள்தாங்க.

    English summary
    Puratchi Thalaivar MGR acted Rickshawkaran movie is released in digital technology on July 26th. Daily 4 Show has been running a housefull for the past one week. Be that as it may, the Salem Saraswati Theater and the Daily 4 Show are running housefull.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X