ரிஹான்னாவுக்கும் சிக்கல்... இணையத்தில் கசிந்தது அவரது நிர்வாணப் படங்கள்!

லண்டன்: பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் இணையத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்ற பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் நேற்றிரவு இண்டர்நெட் மூலமாக சமூக வலைத்தளங்களில் கசிந்தது.

செல்பியின் உச்சகட்டமாக சிலர் தங்களைத் தாங்களே ஆடைகளற்ற நிலையில் செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். பிரபலமானவர்கள் சிலர் இவ்வாறு தாங்கள் எடுத்துக் கொள்ளும் நிர்வாணப்படங்களை, தங்களது நெருக்கமானவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்கின்றனர்.

கில்லாடிகள்...

கில்லாடிகள்...

ஆனால், தொழில்நுட்ப கில்லாடிகள் சிலர் அவ்வாறு பிரபலங்கள் ரகசியமாக பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்களை இடையில் புகுந்து திருடி விடுகின்றனர். அவ்வாறு திருடப்பட்டப் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை உண்டாக்குகின்றன.

ரிஹானாவின் நிர்வாணப்படங்கள்...

ரிஹானாவின் நிர்வாணப்படங்கள்...

சமீபகாலமாக இத்தகையப் பிரச்சினையில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மாடல்...

மாடல்...

இவருடன் இங்கிலாந்தின் பிரபல மாடல் அழகி ஒருவரின் நிர்வாணப் படங்களும் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்ளவ்ட்...

ஐக்ளவ்ட்...

ஆப்பிள் நிறுவனம் வழங்கி வரும் ஐக்ளவ்ட் சேவை மூலமாகவே இத்தகைய ரகசிய படங்கள் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இப்பிரச்சினைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஆப்பிள் விளக்கம் அளித்துள்ளது. இதனால், பிரபலங்கள் பலரின் கோபம் ஆப்பிள் நிறுவனத்தின் மீது திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெனிபர் லாரன்ஸ்...

ஜெனிபர் லாரன்ஸ்...

முன்னதாக ஹாலிவுட்டின் இளம் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், டி.வி. தொகுப்பாளினி கிம் கர்தஷியன், நடிகை வனேஸ்ஸா ஹட்கென்ஸ், நகைச்சுவை நடிகை ஆப்ரே பிளாஸா ஆகியோரின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த வாரம் இணையதளங்களில் உலா வந்து பரபரப்பை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: rihanna இணையம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X