ஆத்தி.. அம்பானி மகன் திருமணத்தில் ஆட ரிஹானாவுக்கு இத்தனை கோடியா?.. படையெடுக்கும் பிரபலங்கள்!

மும்பை: முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா மெகா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்திருக்கிறார். கர்ப்பிணியாக உள்ள தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் ப்ரீ வெட்டிங்கில் பங்கேற்க வந்துள்ளார்.

இப்படி பாலிவுட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் படையெடுத்துள்ள நிலையில், ஹாலிவுட்டில் இருந்து பாடகி ரிஹானா இன்று மாலை 5 மணிக்கு தனது நடனத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுக்க காத்திருக்கிறார்.

Rihanna who performs in Anant Ambani pre wedding will receive 50 crore salary for just one day?

திருமண விழாவில் நடனமாடுவதற்கு ரிஹானாவுக்கு எத்தனை கோடிகள் கொடுத்துள்ளனர் என்பதை கேட்டால் தலையே சுற்றி விடும்.

ஆனந்த் அம்பானி திருமணம்: உலகளவில் மிகப்பெரிய பணக்காரராக வலம் வரும் இந்தியாவின் ஜியோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் விரேன் மெர்ச்சன்ட் எனும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி தான் திருமணம் நடக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த அம்பானி திட்டமிட்டுள்ளார். கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. ஒரு மாதம் என்ன ஒரு வருஷம் கூட திருமணம் செய்வார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த பாலிவுட்டும்: அம்பானி வீட்டு திருமணம் என்றால் சும்மாவா ஷாருக்கான், தீபிகா படுகோன், ஆலியா பட் உள்ளிட்ட பல பிரபலங்கள் அம்பானி மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குஜராத்தில் உள்ள ஜாம் நகர் விமான நிலையத்துக்கு வந்திறங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த திருமணம் நடைபெற்று வருகிறது.

ரிஹானாவின் டான்ஸ் இருக்கு: அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானா இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டுப் பாடி நடனமாட குஜராத்துக்கு வந்திருக்கிறார். அவரது லக்கேஜ் வரும் வீடியோக்கள் கூட வெளியாகி உள்ளன. இன்று மாலை 5 மணியளவில் அவரது இசை மற்றும் நடன நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நடனமாட அமெரிக்காவில் இருந்து வந்திறங்கி உள்ள ரிஹானாவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. புஷ்பா பாட்டுக்கே சமந்தா 5 கோடி தானப்பா வாங்குனாங்க கல்யாணத்தில் டான்ஸ் ஆட ரிஹானாவுக்கு 50 கோடியா என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல உள்ளூர் ஆட்டக்காரிகள் வாய் பிளந்து ஆச்சர்யத்தில் மூழ்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X