ஏன் இப்படி? அதுதான் காரணமா? தனது பிரம்மாண்ட நடனப் பள்ளியை திடீரென மூடினார் பிரபல நடிகை!

By

கொச்சி: பிரபல நடிகை, தான் நடத்தி வந்த நடனப் பள்ளியை மூடிவிட்டதாக அறிவித்துள்ளார்.

தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் பரத், சந்தானம் நடித்த யுவன் யுவதி மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை, ரிமா கல்லிங்கல்.

இதையடுத்து சில படங்களில் நடித்த அவர், மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஃபீமேல் கோட்டயம்

ஃபீமேல் கோட்டயம்

நீலத்தாமரா, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், சிட்டி ஆப் காட், 22 ஃபீமேல் கோட்டயம் உட்பட பல படங்களில் நடித்திருக்கும் ரீமா கல்லிங்கல், இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடத்து வருகிறார். இப்போது பாலிவுட் வெப் சீரிஸில் ஒன்றிலும் நடித்துள்ளார்.

ஜிந்தகி இன் ஷார்ட்

ஜிந்தகி இன் ஷார்ட்

இவர், பிளிப்கார்ட் தயாரித்துள்ள ஜிந்தகி இன் ஷார்ட் என்ற இந்தி தொடரான இதில், 7 கதைகள் இடம்பெறுகின்றன. வித்தியாசமான மனிதர்களை பற்றிய கதையான இதில், ரீமா கல்லிங்கலுடன் சஞ்சய் கபூர், நீனா குப்தா, திவ்யா தத்தா, மன்ஜோத் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.

நடன ஸ்டூடியோ

நடன ஸ்டூடியோ

வைரஸ் என்ற மலையாளப் படத்தை தயாரித்த இவர், சந்தோஷிண்டே ஒன்னாம் ரகசியம், ஹாகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் நடத்தி வந்த மாமாங்கம் என்ற நடன ஸ்டூடியோவை மூடிவிட்டதாகக் கூறியுள்ளார். இதை அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கொச்சியில் அவர் தொடங்கினார்.

இனிமை நினைவுகள்

இனிமை நினைவுகள்

இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியுள்ள அவர், 'கொரோனா காரணமாக இதை மூடுகிறேன். இந்த டான்ஸ் ஸ்டூடியோவுடன் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. இங்கு நடந்த நடன வகுப்புகள், நடன ஒத்திகைகள், படங்களின் திரையிடல், வெள்ளநிவாரண முகாம், விவாதங்கள் உட்பட பல விஷயங்கள் நினைவுகளில் இருக்கும்.

மேடை நிகழ்ச்சிகள்

மேடை நிகழ்ச்சிகள்

மாமாங்கம் டீமுக்கும் நடனம் பயின்றவர்களுக்கும் இந்த நடன ஸ்டூடியோவுக்காக எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. ஸ்டூடியோ மூடப்பட்டு விட்டாலும் தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X