யாருகிட்ட..? அப்படிச் சொல்லி கிண்டலடித்த ரசிகர்.. இப்படிச் சொல்லி கப்சிப் ஆக்கிய பிரபல ஹீரோயின்!
சென்னை: தன்னை கிண்டலடித்த ரசிகர் ஒருவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிரபல நடிகை.
மலையாளத்தில் நீலத்தாமரா, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், சிட்டி ஆப் காட், 22 பீமேல் கோட்டயம் உட்பட பல படங்களில் நடித்தவர் ரிமா கல்லிங்கல்,
தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் பரத், சந்தானம் நடித்த யுவன் யுவதி, ஜீவா நடித்த கோ படங்களிலும் நடித்துள்ளார்.

ஜிந்தகி இன் ஷார்ட்
நடிகை ரீமா கல்லிங்கலும் வெப் சீரிஸில் நடிக்கிறார். இவர், பிளிப்கார்ட் தயாரிக்கும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். ஜிந்தகி இன் ஷார்ட் என்ற இந்தி தொடரான இதில், 7 கதைகள் இடம்பெறுகின்றன. வித்தியாசமான மனிதர்களை பற்றிய கதையான இதில், ரீமா கல்லிங்கலுடன் சஞ்சய் கபூர், நீனா குப்தா, திவ்யா தத்தா, மன்ஜோத் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.

திருமணம்
படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, பிரபல இயக்குனர் ஆசிக் அபுவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் 2013 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்தது. திருமணத்துக்கும் பிறகும் நடித்து வரும் ரிமா கல்லிங்கல், கடைசியாக வைரஸ் படத்தில் நடித்திருந்தார். அடுத்து ஆஷிக் அபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

த்ரோபேக் போட்டோ
லாக்டவுன் காரணமாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள் நடிகர், நடிகைகள். நடிகை ரிமா கல்லிங்கலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் இப்போது த்ரோபேக் போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஸ்பெயின் சென்ற போது எடுத்தபடம் என்று அதில் கூறியிருந்தார். ஒரு போட்டோவில் ஷார்ட்ஸும் சட்டையும் அணிந்திருந்தார்.

பழங்குடிப் பெண்
இதை பலர் அழகாக இருக்கிறது என்று கூறியிருந்தனர். ஆனார் ஒரு ரசிகர், இந்த புகைப்படத்தில், உங்கள் உடையை பார்க்கும்போது ஆதிவாசிப் பெண் போல இருக்கிறீர்கள் என்று கூறியிருந்தார். வழக்கமாக நடிகைகள், இதுபோன்று அவதூறாக கமென்ட் அடிக்கும் ரசிகர்களை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவார்கள்.

விடவில்லை
ஆனால், நடிகை ரிமா அந்த ரசிகரை விடவில்லை. 'என்னை ஆதிவாசி என்றுதானே சொல்கிறீர்கள். என்னை அப்படி விவரித்ததற்கு நன்றி. அவர்கள்தான் உண்மையான ராஜாவும் ராணியும்' என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து மேலும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் ரிமா. இதை ரசிகர்கள் பலர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











