“ரிங் ரோடு”... தமிழில் மீண்டும் ஒரு பேய்ப்படம்.. முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாகிறது!

ரிங் ரோடு என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.

Recommended Video

ஜோதிகா பிடித்த நடிகர் அஜித் | ரிங் ரோடு படப்பிடிப்பு தொடங்கியது -வீடியோ

சென்னை: முழுக்க முழுக்க ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட இருக்கிறது ரிங் ரோடு எனும் திகில் படம்.

பி ஆர் எண்டெர்டைன்மெண்ட் பிஜோ எண்டெர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ரிங் ரோடு. சிந்துஜன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வையாபுரி, சிசர் மனோகர், ரஞ்சன், தீப்பெட்டி கணேசன், கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

Ring road - A new horror movie

இப்படத்தின் இசை நூர் லகான். ஒளிப்பதிவு கொளஞ்சிக்குமார்.

இப்படம் பற்றி அதன் இயக்குனர் ஏஎம் பாஸ்கர் கூறுகையில், "இத்திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவுள்ளது. பேய் பட சீசனான தற்போது முழுக்க முழுக்க ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்படவிருக்கும் வித்தியாசமான பேய் படமாக ரிங் ரோடு இருக்கும் என உறுதியளிக்கிறேன். இப்படத்தில் புதுமுகம் சிந்துஜன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியிடம் காதலை சொல்லும் வாலிபர்கள் அனைவரும் மர்மமான முறையில் மரணமடைகின்றனர். ஆனால் அவளிடம் காதலை வெளிப்படுத்தும் கதாநாயகன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அதற்கான காரணம் என்ன, கதாநாயகன் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சொல்லவரும் படம்தான் இந்த "ரிங் ரோடு. டிசம்பர் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெறவுள்ளது."என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X