மீண்டும் ரேங்க் டாஸ்க்.. இதுக்கு பேர்தாங்க கார்னர்.. ஆரியை அட்டாக் பண்ணும் ரியோ.. அதகள புரமோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரேங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதும் ஆரியை ரியோ அட்டாக் பண்ணுவதும் இன்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மூன்றாவது சுற்றை எட்டியிருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த புரமோவில் பாலாஜி பாலை பிடிக்க வந்து விழுந்து வாரியதும் தெரியவந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

தூங்காதே தம்பி தூங்காதே
அதில் இரவு முழுக்க கண் விழித்த களைப்பில் ஹவுஸ்மேட்ஸ்கள் தூங்குகின்றனர். இதனை பார்த்த பிக்பாஸ் தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை ஒலிப்பரப்பி பட்டையை கிளப்பியுள்ளார்.

மீண்டும் ரேங்க் டாஸ்க்
பாட்டை கேட்டதும் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் அடித்து பிடித்து எழுந்து சிரிக்கின்றனர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் அடுத்த டாஸ்க்கை வாசிக்கிறார். அதன்படி போட்டியிடும் தன்மை, ஈடுபாடு மற்றும் பங்களிப்பை வைத்து போட்டியாளர்கள் தாங்களே தங்களை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

திரும்ப சொல்ல மாட்டீங்களா
இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது ரியோவிடம் பேசும் ஆரி, எனக்கு புரியவில்லை, ஒரு தடவை சொன்னால் திரும்ப சொல்ல மாட்டீங்களா என்று கேட்கிறார்.

இதுக்கு பேர்தாங்க கார்னர்
அதற்கு நான் 100% கொடுத்திருக்கேன் என்று சொல்லும் ரியோ, இதுக்கு பேர்தாங்க கார்னர் என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வேகமாக எழுந்து செல்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ.

வாயை திறந்தாலே..
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் பாலாஜி, ரம்யா, அனிதா, கேபி, சோம், ஆஜித், ரியோ என அனைத்து போட்டியாளர்களும் ஆரியை கட்டம் கட்டி வருகின்றனர். ஆரி வாயை திறந்தாலே அவரை பேசவிடாமல் வயது வித்தியாசம் இல்லாமல் அவமானப்படுத்தி வருகின்றனர்.

ஆரிக்குதான் டைட்டில்
ஆரம்பத்தில் இருந்தே நேர்மையாக விளையாடி வரும் ஆரிக்கு ஹவுஸ்மேட்ஸின் இந்த செயலால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவருக்கு தான் பிக்பாஸ் டைட்டிலை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











