சுறுக்கமா பேசுனீங்கன்னா உங்க முன்னாடி யாருமே நிக்க முடியாது.. ரியோவும் ஆரியைதான் குத்தினார்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் குறை கூறும் டாஸ்க்கில் ரியோவும் ஆரியையே கட்டம் கட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்குமே ஆகாத ஒரு போட்டியாளர் என்றால் ஆரிதான்.

யாருடனும் கூட்டு சேராமல் சக போட்டியாளர்களின் குறைகளை பட்டென முகத்திற்கு நேராக கூறி விடுகிறார்.

அதிகரித்த கோபம்

அதிகரித்த கோபம்

இதனாலேயே ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் ஆரியை பிடிக்கவில்லை. மக்களின் மத்தியிலும் ஆரிக்கு நல்ல பெயர் உள்ளதை அறிந்த ஹவுஸ்மேட்ஸ், கடந்த சில வாரங்களாக அவர் மீது இன்னும் கோபத்தையும் வன்மையையும் உமிழ்ந்து வருகின்றனர்.

ஆரி பற்றிய பேச்சுதான்

ஆரி பற்றிய பேச்சுதான்

கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் ஆரியை எப்படி தவறாக காட்டலாம் என்றே யோசித்து விளையாடி வருகின்றனர். ஆரி இல்லாத இடத்திலும் கூட இரண்டு போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்தால் அந்த இடத்தில் ஆரியை பற்றிய பேச்சாகதான் இருக்கும். சில போட்டியாளர்கள் ஆரிக்கு சம்பந்தம் இல்லாத இடத்திலும் அவரை பற்றி பேசி ஆடியன்ஸிடம் அவர் கெட்டவர் என்று காட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

குறை சொல்லும் டாப்பிக்

குறை சொல்லும் டாப்பிக்

இந்நிலையில் நேரடியாகவே குறைகளை சொல்லுங்கள் என்று லட்டு போன்று குறை சொல்லும் டாப்பிக்கை ஒரு டாஸ்க்காகவே கொடுத்தார் பிக்பாஸ். இதில் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் ஆரியை மட்டுமே டார்கெட் செய்து பேசினர்.

நீட்டா வச்சுக்கலாம்

நீட்டா வச்சுக்கலாம்

அந்த வகையில் பேச வந்த ரியோ, முதல் ஆளாக ஷிவானியின் குறைகளை கூறினார். ஷிவானி தன்னைத்தானே ஹேப்பியா வச்சுருக்கிறார். ஆனால் இருக்குற இடங்களான கிட்சன், பாத்ரூம் போன்ற இடங்களை இன்னும் கொஞ்சம் நீட்டா வச்சுகலாம் என்று கூறினார்.

கன்னை வைத்துக்கொண்டு

கன்னை வைத்துக்கொண்டு

அடுத்து பாலாஜி குறித்து பேசிய ரியோ, அவர் பொறுமையாக இருக்கலாம், எல்லா இடங்களிலேயும் கன்னை வைத்துக் கொண்டு விரைப்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறினார்.

ஃபெயில் என்று முடிவு..

ஃபெயில் என்று முடிவு..

தொடர்ந்து கேபி குறித்து பேசிய ரியோ, ட்ரை பண்ணாமலே டிசைட் முடிவு செய்து விடுவார். அதை நான் குறையாக பார்க்கிறேன். ட்ரை பண்ணிட்டு ஃபெயில் ஆகலாம், ட்ரையே பண்ணாமல் ஃபெயில் என்று முடிவு செய்யக் கூடாது என்றார்.

ரம்யாவின் குறைகள்

ரம்யாவின் குறைகள்

அடுத்து ரம்யா குறித்து பேசிய ரியோ, ஒரு சைடு மட்டும் பேசிட்டு, என்ன நடந்தது என்று தெரியாமலே நமக்கு தேவையில்லை என்று கூறிவிட்டு செல்கிறார். ஒரு பிரச்சனை என்றால் ரெண்டு சைடும் என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று கூறினார் ரியோ.

யாருமே நிக்க முடியாது

யாருமே நிக்க முடியாது

தொடர்ந்து ஆரி குறித்து பேசிய ரியோ, சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் கவனிக்கும் கெப்பாசிட்டியே 45 நிமிடம்தான். ஆக ஆரி புரோ சொல்ல வருவதை சுறுக்கமா சொல்லி விட்டால் அவருக்கு முன்பு யாருமே நிக்க முடியாது என்றார். மேலும் ஆரி, ஈசி அப்ரோச்சப்பிள் பர்சனாக மாற வேண்டும் என்றும் ரியோ கூறினார்.

சோமின் குறைகள்

சோமின் குறைகள்

அடுத்து சோம் பற்றி பேசிய ரியோ, சோம் எந்த விஷயமாக இருந்தாலும் எல்லாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஹேப்பியாக இருக்க வேண்டும் என்றாலும் கூட எல்லோரையும் சேர்த்துக் கொண்டு இருப்பார். இந்த வீட்டுக்கு அது தேவையில்லை என்பதால் அதை குறையாக பார்க்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X