இதெல்லாம் ஓவரா தெரியல.. ரியோ நிஷாவும் சைன்ட்டிஸ்ட்டாம்.. இதுல வார்த்தைக்கு வார்த்தை டார்லிங் வேற!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் ரியோவையும் நிஷாவையும் ஜோடி சேர்த்துவிட்டு பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் நாமினேஷன் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
இதனால் கடந்த வாரங்களை போன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை இருக்காது என தெரிகிறது.

அர்ச்சனா பாட்டி
இந்நிலையில் தீபாவளி செலிபிரேஷனாக பாட்டி சொல்லை தட்டாதே என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஊரிலேயே பெரிய குடும்பமாக அர்ச்சனாவின் குடும்பம் உள்ளது. அர்ச்சனாதான் பாட்டியாக உள்ளார்.

சொத்து பத்திரங்கள்..
அவருடைய பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளிலும் வெளி ஊரிலும் உள்ளனர். பாட்டியின் சொத்தை ஆட்டை போட வந்துள்ளனர். யார் சொத்து பத்திரங்களை திருடப் போகிறார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சைன்ட்டிஸ்ட்
இதில் ஒரு பேராக ரியோவும் நிஷாவும் உள்ளனர். பாட்டி அர்ச்சனாவின் மகளான நிஷா அமெரிக்காவில் சைன்ட்டிஸ்டாக இருந்தார். அப்போது லேபில் உடன் பணிபுரிந்த மற்றொரு சைன்ட்டிஸ்டான ரியோவுடன் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

டார்லிங்.. டார்லிங்
இதனால் இருவரும் தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் பேசி கொள்கிறாகள். அதோடு வார்த்தைக்கு வார்த்தை டார்லிங் டார்லிங் என்றும் அழைத்து கொள்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், யாருக்கு யார் என்ன உறவுன்னே இப்படி போட்டு குழப்பியடிக்கிறீங்களே என புலம்பி வருகின்றனர்.

பிக்பாஸ் வீடு மூழ்கி விடும்
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ ராஜ் சைன்ட்டிஸ்ட்டா.. அப்போ இந்த டாஸ்க்குடைய க்ளைமேக்ஸ் வைரஸ் பரவும். அப்புறம் சுனாமி வந்து பிக்பாஸ் வீடு மூழ்கி விடும் அதானே என கேட்டு நக்கலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











