உன்னை பார்த்தா பயமா இருக்குன்னு சொல்லி குத்த வேண்டியதுதானே..ஆரியை அசிங்கமாய் பேசிய ரியோ அன்ட் சோம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை நாமினேட் செய்த ஆரியை ரியோவுடன் சேர்ந்து மோசமாய் பேசினார் சோம்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற லெவிஸ்டா காஃபி டாஸ்க்கின் போது கேக் உள்ளிட்ட 3 ஐட்டங்களை ஆரியும் ரம்யாவும் டீமாக செய்தனர். அதை சாப்பிட்டுவிட்டு ஐ லவ் இட் என்று கூறினார் ஜட்ஜாக இருந்த சோம்.
மற்றொரு டீமாக இருந்த அனிதாவும் கேபியும் ஆரஞ்சு ஃபலுடா, கோல்டு காஃபி என 2 ஐட்டங்களை மட்டுமே செய்தனர். 2யும் சாப்பிட்ட சோம் எதில் என்ன குறை நிறை என்று சொல்லாமலே கேபி டீம்தான் வின்னர் என்று அறிவித்தார்.

ஆரி நாமினேஷன்
அப்போதே சோம் கேபி மற்றும் அனிதாவுக்காக ஃபேவரிட்டிஸம் செய்தார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் புராசஸின் போது, காஃபி டாஸ்க்கில் சோமின் ஜட்ஜ்மென்ட் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி அவரை நாமினேட் செய்தார் ஆரி.

தூண்டி விட்ட ரியோ
அப்போதே அதுகுறித்து வாக்குவாதம் செய்தார் சோம் அதனைக் கேட்ட ஆரி, உன்னுடைய ஜட்ஜ்மென்டில் எனக்கு கிளாரிட்டி இல்லை என்று கூறி விட்டார். இதைத்தொடர்ந்து ரியோவும் கேபியும் வெளியே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சோமிடம், காஃபி நல்லாருக்குன்னு சொன்னது ஒரு குத்தமாடா.. என்று ஆரியை டேமேஜ் பண்ண ஆரம்பித்தார் ரியோ.

அப்புறம் நான் என்ன..
அதையே திருப்பி திருப்பி கூறினார் ரியோ. அதற்கு பதில் சொன்ன சோம், நான் தான் ஜட்ஜ்.. நான் தான் சாண்டா.. எனக்கு பிடிச்ச ஜட்ஜ்மென்ட்தான் நான் கொடுக்க முடியும் என்றார். அவனுக்கு பிடிச்சது நான் சொன்னா அப்புறம் நான் என்ன என்று எதையோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டார்.

பயமா இருக்குன்னு..
மேலும் இதுக்கெல்லாமா நாமினேட் பண்ணுவாங்க? இதெல்லாம் ஃபன்னியா இருக்கு.. சில்லியா இருக்கு.. ஆரியை நினைச்சா பாவாமா இருக்குடா என்றும் ரியோவிடம் நக்கலடித்தார் சோம். தொடர்ந்து, நீ ஸ்ட்ராங்கான கன்டெஸ்டென்ட், உன்னை பார்த்தா பயமா இருக்கு என்று சொல்லி நாமினேட் பண்ண வேண்டியதுதானே?

மூக்க நோண்டுறதுக்கெல்லாம்
மூக்க நோண்டுறதுக்கெல்லாம் நாமினேட் பண்ணுவாங்களோ என்றும் நக்கலடித்தார் சோம். அப்போது பேசிய ரியோ, அவர்தான் கமல் சார்க்கிட்டேயே சொல்றாரே,வாதாடி தான் ஜெயிக்கணும்னு என்று கொதித்தார். அதற்கு பதில் சொன்ன சோம், வித்தியாசமா பதில் சொல்லணும் என்று சொல்கிறாரே என்றார்.

கூகுளில் தேடி கண்டுபிடி
இதனால் கடுப்பான ரியோ அவரு என்ன சைன்ஸ் டீச்சரா என்றார். தொடர்ந்து பேசிய சோம் வெளியே போனதும் வேலிடேட்ன்னா என்ன கூகுளில் சர்ச் பண்ணுவேன் என்றார். அதற்கு அதையெல்லாம் கண்டுபிடிக்காதே எந்த காஃபி நல்லாருக்கும் என்று தேடி கண்டுபிடி என நக்கலடித்தார் ரியோ


Click it and Unblock the Notifications











