ஆகா.. அர்ச்சனா போட்ட மந்திரம் வேலை செய்யுது போலயே.. ஆரியிடம் எகிறும் ரியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட்டான போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று அர்ச்சனா, ரமேஷ், நிஷா, ரேகா ஆகியோர் வந்தனர். இன்று சம்யுக்தா, சுச்சி, சனம் ஷெட்டி ஆகியோர் வந்துள்ளனர்.

அர்ச்சனா பேசவில்லை

அர்ச்சனா பேசவில்லை

நேற்று அர்ச்சனா வந்ததை பார்த்த ரசிகர்கள் அவர் என்னெல்லாம் பாடுபடுத்தப் போகிறாரோ என்று பயந்தனர். அதற்கு ஏற்றார் போலவே ஆரியிடம் முகம் கொடுத்து பேசாமல் பாலாஜி ஆரியிடம் சண்டை போட்டதை நினைத்து பெருமைபடுவதாக கூறினார்.

ஒரு வழி ஆக்கி விடுவார்

ஒரு வழி ஆக்கி விடுவார்

இதனை பார்த்த நெட்டிசன்கள், திருந்தவே மாட்டார் இந்த அர்ச்சனா விளாசினர் நெட்டிசன்கள். மேலும் ரியோவையும் பாலாஜியையும் ஏற்றிவிட்டு ஆரியை ஒரு வழி ஆக்கி விடுவார் என்றும் கூறினர்.

சனம் ஷெட்டியும் என்ட்ரி

சனம் ஷெட்டியும் என்ட்ரி

அவர்கள் சொன்னது போலவே ரியோ அர்ச்சனாவின் மந்திரத்தில் மாறியது இன்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது. அதாவது இன்றைய இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி உட்பட ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் லிவிங் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்திருக்கின்றனர்.

தலையை ஆட்டிய ஆரி

தலையை ஆட்டிய ஆரி

அப்போது கேபியும் ரியோவும் டாஸ்க்குக்காக டீம் பிரிக்கிறார்கள். கேபி ஆரியிடம், ஆரி புரோ உங்களுக்கு ஓகே வா ஓகே வா என்று கேட்கிறார். அதற்கு ஆரி சரியென தலையை ஆட்டுகிறார்.

மூக்கை நுழைத்த ரியோ

மூக்கை நுழைத்த ரியோ

இதனை கவனிக்காத ரியோ, நாலு தடவை கேட்டுட்டா பிரதர் ஓகே வா இல்லையான்னு பதில் சொல்லுங்கள் பிரதர் என்று கூறுகிறார். அதற்கு பதில் சொல்லும் ஆரி, ஓகேன்னு சொல்லிட்டேன் பிரதர் நீங்க பார்க்கலையா என்கிறார்.

ஆரியிடம் மல்லுக்கட்டு

ஆரியிடம் மல்லுக்கட்டு

ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொண்ட ரியோ சாரி பிரதர், நான் இப்போ ஏதாவது தப்பா கேட்டுட்டேனா பிரதர் என்று எல்லோருக்கும் முன்பு கேட்கிறார். அதற்கும் பதில் சொல்லும் ஆரி நீங்கள் கேட்ட சென்ஸ், நான் பதில் சொல்லாம அவளை இழுத்தடிக்கிற மாதிரி டோன்ல நான் கேட்டதால நான் கேபிக்கிட்டே பேசிட்டேன்னு சொன்னேன் என்கிறார்.

சோக முகத்துடன் ஆரி

சோக முகத்துடன் ஆரி

அதனை மறுக்கும் ரியோ, தெரியல பிரதர், எந்த தப்பான எண்ணத்துலேயும் நான் சொல்லல. நீங்க என்கிட்ட அப்படி ரியாக்ட் பண்ணியிருக்க வேண்டாம். நான் இடையில வந்தது தப்பு சாரி என்கிறார். அப்போது நான் சாரி பிரதர் சாரி பிரதர் என்று கூறியப்படியே சோக முகத்துடன் அந்த இடத்தை விட்டு செல்கிறார் ஆரி.

ஏன் உள்ளே விட்டீற்கள்

ஏன் உள்ளே விட்டீற்கள்

இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா போட்ட மந்திரம் சிறப்பாக வேலை செய்கிறது போலவே என்று புலம்பி வருகின்றனர். மேலும் சிலர் ஏன் அந்த அன்பு கேங்கை மீண்டும் உள்ளே விட்டீற்கள் என்றும் விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X