For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரிய ஏன் நம்ம டீம்ல எடுத்தீங்க.. பேவரிட்டிஸத்தை பாலாஜியிடம் நியாயப்படுத்தும் ரியோ.. அன்சீன் புரமோ!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ரோபோக்களுக்கு பெயர் வைப்பதில் ரியோ ஃபேவரிட்டிஸம் காட்டியதாக கூறப்பட்டது.

    அதனை தொடர்ந்து எதிரணியை சேர்ந்த கேபிக்கும் ஆதரவாய் விளையாடினார். இந்த விஷயத்தை கமலே கேட்ட போதும் மாற்றி மாற்றி ஏதையோ சொல்லி சமாளித்தார்.

    வீடு திரும்பிய நிஷாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற அம்மா.. கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்!

    ஆரியிடம் எகிறிய கேபி

    ஆரியிடம் எகிறிய கேபி

    இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் களேபரம் ஏற்பட்டது. கேபியிடம் பேசியது குறித்து ரியோவிடம் கேட்டார் ஆரி. ஆனால் அதில் தனது பெயரும் இருப்பதாக கூறி ஆரியிடம் எகிறினார் கேபி.

    அன்சீன் புரமோ

    அன்சீன் புரமோ

    இதனால் சமூக வலைதளங்களில் கேபியை கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் அன் சீன் காட்சிகள் விஜய் மியூஸிக் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பபட்டு வருகிறது.

    ஆரியை ஏன் எடுத்த..

    ஆரியை ஏன் எடுத்த..

    அதற்கான அன்சீன் புரமோக்களும் விஜய் சூப்பர் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியான அன்சீன் புரமோவில் பாலாஜியிடம் பேசும் ரியோ, உன் டீம்ல என்னை எடுத்தல்ல, ஆரி புரோவ எடுக்காம இருந்திருக்கலாம்ல என்று கேட்கிறார்.

    கருத்து.. அட்வைஸ்ன்னு..

    கருத்து.. அட்வைஸ்ன்னு..

    அவரு ஆப்போஸிட் டீம்ல இருந்திருப்பாரு. அப்போ அவருக்கு கருத்து, அட்வைஸ்ன்னு பேர் வைக்கலாம்லன்னு சொல்லியிருப்ப. அதுக்கு வேண்டாம்பா, பாவம்னு நான் சொல்லியிருந்தன்னா நான் அவருக்கு ஃபேவரிட்டிஸம் பாத்தேன்னு சொல்லியிருப்பாங்க.

    ஃபேவரிட்டிஸம்

    ஃபேவரிட்டிஸம்

    எத்தனை தடவை நான் ரமேஷ் புரோவையும் மத்தவங்களையும் பாவங்க அப்படி சொல்லாதீங்கன்னு சொல்லியிருக்கேன்.. இப்போ மட்டும் எங்கேயிருந்து வந்துச்சு இந்த ஃபேவரிட்டிஸம் என்று எகிறி குதிக்கிறார்.

    English summary
    Biggboss today's unseen promo has been released. Rio argues with Balaji about favoritism in Unseen promo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X