கொளுத்தி போட்டது.. சும்மா பற்றி எரிகிறது… ரணகளமாகும் பிக் பாஸ்!

சென்னை : பிக்பாஸ் வீடு ஏற்கனவே பற்றி எரிந்து வரும் நிலையில் நாமினேஷன் என்ற பெயரில் இப்பொழுது பிக்பாஸ் வைத்துள்ள டாஸ்க் மேலும் அனைவரையும் பற்ற வைத்துள்ளது.

நேற்று கமல்ஹாசனுடன் நடந்த உரையாடலில் ரம்யா பாண்டியன், அனிதா உள்ளிட்டவர்களை சூசகமாக வஞ்சப்புகழ்ச்சி செய்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வழக்கம்போல திங்கட்கிழமையான இன்று நாமினேஷன் செய்யும் டாஸ்க் இந்த முறை அதிரடியாக அனல் பறக்க ஒருவரையொருவர் தீயிட்டு கொளுத்தி கொண்டு நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு வாரமும்

ஒவ்வொரு வாரமும்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரம் செல்லச் செல்ல போட்டியாளர்களிடம் பல மாற்றங்கள் தெரிய ஒவ்வொருவரின் சுய ரூபமும் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

பரம்பரை எதிரிகள்

பரம்பரை எதிரிகள்

இந்தநிலையில் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த ரியோ மற்றும் பாலாஜி முருகதாஸ் இப்பொழுது பரம்பரை எதிரிகள் போல ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்ள பிக் பாஸ் விளையாட்டு சூடு பிடிக்கிறது.

அடக்கி வாசிக்க,

அடக்கி வாசிக்க,

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மெயின் கண்டன்டாக இருந்த சுரேஷ் இப்போது அடக்கி வாசிக்க, இரண்டு வாரங்களாக அடக்கி வாசித்த பாலாஜி, ஷிவானி, ஆரி உள்ளிட்டோர் இப்பொழுது படு பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

வில்லனாக தெரிகின்றார்

வில்லனாக தெரிகின்றார்

சுரேஷ் சக்கரவர்த்தி, நிஷா, சனம் ஷெட்டி ஆரம்பத்தில் டமால் டுமால் என இருந்தவர்கள் எல்லாம் இப்பொழுது அடங்கிப் போய் இருக்க, சமத்து பையனாக இருந்த பாலாஜி இப்பொழுது அனைத்து போட்டியாளர்களுக்கும் வில்லனாக தெரிகின்றார் கேபியை தவிர.

வெறுப்பை சம்பாதித்து

வெறுப்பை சம்பாதித்து

எதுவாயினும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் நேரடியாக வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசும் பண்புடைய பாலாஜி, சமீப நாட்களாக எது உண்மையோ அதை துணிந்து பேசி ஒரு சிலரிடம் நற்பெயரையும் பல போட்டியாளர்கள் இடம் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். இதில் மிக முக்கியமானவர்கள் ரியோ மற்றும் அர்ச்சனா.

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ் மற்றும் அர்ச்சனா பல்வேறு விஷயங்களில் முட்டிக்கொள்ள இப்பொழுது, ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த ரியோ ராஜ் மற்றும் பாலாஜி முருகதாஸ் பரம்பரை எதிரிகள் போல ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.

புரோமோ காட்சிகள்

புரோமோ காட்சிகள்

இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று வழக்கமான நாமினேஷன் ப்ராசஸ் மாதிரி இல்லாமல் போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ அவர்களது புகைப்படங்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என கூற, இப்பொழுது ரியோ ராஜ் பாலாஜி முருகதாஸின் புகைப்படத்தையும் அதேபோல பாலாஜி முருகதாஸ் ரியோவின் புகைப்படத்தையும் தீயிட்டு கொளுத்தியவாறு வெளியாகி இருக்கும் இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ காட்சிகள் பார்க்கும் அனைவரையும் படபடக்க வைத்துள்ளது.

நல்லா கொளுத்தி விளையாடுறீங்க

நல்லா கொளுத்தி விளையாடுறீங்க

மேலும் இதைப்பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீடு ஏற்கனவே ரணகளமாக போய்க்கொண்டிருக்க எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியவாறு, இப்பொழுது பிக் பாஸ் செய்துள்ள இந்த காரியத்தால் பிக்பாஸ் வீடு மேலும் பற்றி எரியும் போல தெரிகிறது என கூறிவருகின்றனர். நல்லா கொளுத்தி விளையாடுறீங்க பிக் பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X