கொளுத்திப்போட்ட பாலாஜி.. அனிதாவை தொடர்ந்து சுரேஷுடன் மல்லுக்கட்டிய ரியோ.. கிழியும் முகத்திரை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவை தொடர்ந்து ரியோ ராஜூம் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் எடுத்தெறிந்து மல்லுக்கட்டி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Day 9 | Housemates in Vijay Style • Nomination

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எல்லாம் செய்தி வாசிப்பாளரான அனிதா சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்து வந்தார்.

ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதி பெருசாக்கினார். சுரேஷ் சக்கரவர்த்தி தன்னை டார்கெட் செய்வது போல் பேசினார்.

வீணாக நோண்டுகிறார்

வீணாக நோண்டுகிறார்

சுரேஷ் சக்கரவர்த்தி புரமோவில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தன்னை வீணாக நோண்டுவதாக கூறினார். தொடர்ந்து கேமரா முன்பு அழுது புலம்பி அனுதாபத்தை சம்பாதிக்க முயற்சித்தார்.

எரிச்சலாக இருக்கிறது

எரிச்சலாக இருக்கிறது

ஆனால் எல்லாம் ரிவிட்டானது. சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார் அனிதா சம்பத். அவரது முகத்தை பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது என்று திட்டி தீர்த்து வந்தனர் நெட்டிசன்கள்.

கேள்வி

கேள்வி

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராம்ப் வாக், டேலன்ட் ரவுண்ட் என பல எண்டெர்டெய்மென்ட் ஈவன்டுகள் நடத்தப்பட்டன. இதன் இறுதியாக போட்டியின் நடுவர்களான சனம் ஷெட்டியும் பாலாஜி முருகதாஸும் ஹவுஸ்மேட்ஸ்களிடம் ஒரு ஒரு கேள்வியைக் கேட்டனர்.

மாஸ்க் போட்டிருக்கிறார்கள்?

மாஸ்க் போட்டிருக்கிறார்கள்?

அப்போது சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கேள்வி கேட்ட பாலாஜி, நீங்கள் கொளுத்தி போடனும் என்று சொல்வீர்களே, நான் உங்களுக்கு கொளுத்திப் போடுகிறேன். யாரெல்லாம் மாஸ்க் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.

ரியோ ஆவேசம்

ரியோ ஆவேசம்

அதற்கு எல்லாருமே போட்டிருக்கிறார்கள்.. எல்லாருக்கும் இரண்டு முகம் இருக்கும்.. ரியோ சொன்னது போல என பேச தொடங்கினார். அதற்குள் என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காத ரியோ என்னை எடுத்துக்காட்டாய் எடுத்து சொல்லாதீங்க.. சொல்லக்கூடாதுன்னா சொல்லக் கூடாது என அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமால் செம ரூடாக பேசினார்.

ரியோ ஆட்டியூட்

ரியோ ஆட்டியூட்

அதற்கு பதிலளித்த சுரேஷ் சக்கரவர்த்தி என்ன பேச வந்தார் என்பதை சொல்லக்கூட விடாமல்.. முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு ஆவேசமாக பேசினார். மேலும் தேங்க்யூ என்று சொல்லும் போது கூட அவ்வளவு ஆட்டியூட் காட்டினார் ரியோ.

ஊன்றுகோளாய் எடுத்துக்கொண்டேன்

ஊன்றுகோளாய் எடுத்துக்கொண்டேன்

கடைசியாக உங்களை உதாரணமாய் கூறவில்லை.. ஊன்றுகோளாய் எடுத்துக்கொண்டுடேன். உங்களை நல்ல படியாக பேசிக்கூட சொல்லக்கூடாதா என்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அதையும் ஏற்கவில்லை ரியோ, இந்த முகம்தான் தெரியக்கூடாது என்று நினைத்தேன் என கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக கிழிகிறது

கொஞ்சம் கொஞ்சமாக கிழிகிறது

ரியோவின் அந்த ஆட்டிட்யூடையும் அவரது முகத்தையும் பார்க்கவே பயமாக இருந்தது. அந்தளவுக்கு ரூடாக நடந்து கொண்டார் ரியோ. சுரேஷ் சக்கரவர்த்தி தனது சீட்டில் போய் அமர்ந்த பிறகும் டெரர் பீஸாய் இருந்தார் ரியோ ராஜ். இதனை பார்த்த ரசிகர்கள் ரியோவின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கிழிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X