கேவலமான பாடி லாங்குவேஜ்.. மோசமான வார்த்தை.. சுரேஷிடம் மீண்டும் மல்லுக்கட்டிய ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோ மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மோசமாக நடந்து கொண்டது ரசிகர்களை எரிச்சலடைய செய்தது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சொல்றீயா செய்றீயா என்ற டெய்லி டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.
இதில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்ற 5 பேர் கேள்வி கேட்பவர்களாகவும், எஞ்சிய 11 பேர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்பவர்கள் அல்ல சொல்வதை செய்ய வேண்டும்.

கண்டிஷனை படித்த ஆரி
அப்போது அந்த டாஸ்க்கில் கேள்வி கேட்டாலும் நீங்களும் நாங்கள் சொல்லும் பதிலில் இருக்க வேண்டும் என சந்தேகத்தை கிளப்பினார் ரியோ. உடனே ஆரி பிக்பாஸ் கொடுத்தனுப்பிய கண்டிஷன் அறிக்கையை படித்தார். அதில் 11 பேர் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று இருந்ததால், அதோடு போதும் என்றார் சுரேஷ்.

வெல் ஷாட் சார்
மேலும் நாங்க 11 பேர சூஸ் பண்றோம், அது எங்க சாய்ஸ் என்கிறார். இதனால் கடுப்பான ரியோ வெல் ஷாட் சார் வெல் ஷாட் சார் என சுரேஷை வெறுப்பேற்றுவது போல் திமிராய் கையை தட்டியப்படியே எழுந்து வந்தார் ரியோ. அப்போது பாலாஜி ஆரி ஆகியோர் நீங்களே படித்து பாருங்கள் என ரியோவிடம் கெடுத்தனர்

சுரேஷை மிரட்டிய ரியோ
ஆனால் அதான் சார் சொல்லிட்டாருல்ல அப்புறம் என்ன என ரொம்பவே நக்கலாய் பேசினார். அப்போது எவ்ளோ நேரம் கேமில் தப்பு பண்ணியிருந்தால் அவர் சொல்லியிருக்கப் போறாரு என்று மேலே கையைக் காட்டி பிக்பாஸை கூறினார் சுரேஷ். அந்த நேரம் தனது குரூப்புடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ரியோ, திடீரென வாட் சார் என மிரட்டும் தொனியில் சுரேஷிடம் கேட்டார்.

கேவலமான பாடி லாங்குவேஜ்
உடனே இவ்ளோ நேரம் ஏதாவது தப்பு பண்ணியிருந்தால் அவரு சொல்லியிருப்பாருல்ல என பயத்துடன் பதில் சொல்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதற்கு மேல இருக்குறவரா சார்.. என கேட்கும் ரியோ, அவருக்கு வேலையே இல்லையா? நீங்க ஏதாவது நோண்டிக்கிட்டே இருப்பீங்க வந்துக்கிட்டே இருப்பாரா என கேவலமான பாடி லாங்குவேஜுடன் கேட்டார்.

நாகரீகம் இல்லை
ரியோவின் பிஹேவிங்கை பார்த்ததும் சுரேஷ் சக்ரவர்த்தியின் முகம் அப்படியே மாறி விட்டது. உடனே பாலாஜி, அனிதா, ஆரி ஆகியோர் இதை பர்சனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ரியோவை சமாதானப்படுத்தினர். ஆனால் ரியோவின் அந்த பிஹேவிங் கொஞ்சம் நாகரிகம் இல்லாமல் மோசமாய் இருந்தது.


Click it and Unblock the Notifications











