Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நான் சுவரை பிடித்து தத்தி தத்தி நடக்குறேன் அப்பா.. ரியோவை கண்ணீர்விட வைத்த மகள்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் தத்தி தத்தி நடக்க ஆரம்பித்த தகவலையும் அவர் அப்பா என்று அழைத்த தகவலையும் கேட்ட ரியோ கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர்விட்டு கதறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த ஆரி, ரியோவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அந்தகாரம் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம்...அட்லியின் முதல் தயாரிப்பே வெற்றி!
அப்போது ஆரியிடம் பேசிய பிக்பாஸ், நான் ஒரு ரெண்டு நிமிஷம் ரியோவிடம் பேசிக்கலாமா ஆரி, அவரை கொஞ்சம் கன்ஃபெஷன் ரூமுக்கு அனுப்பி வையுங்க என்றார்.
கன்ஃபெஷன் ரூமில் ரியோ
பிக்பாஸ் சொன்னதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் ஆச்சரியப்பட்டனர். தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற ரியோ, உங்களுக்கு ஐ லவ் யூ சொல்றதா முத்தம் கொடுக்குறதா எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை பிக்பாஸ் என ஆரியிடம் இருந்து பிக்பாஸ் தன்னை காப்பாற்றியதை போல பேசினார்.
யாரை மிஸ் பண்றீங்க?
தொடர்ந்து பேசிய பிக்பாஸ், நல்லா விளையாடுறீங்க ரியோ, இப்போ திரும்பி பார்த்தா யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன ரியோ ஃபிரண்ட்ஸ், வொய்ஃப் பொண்ண மிஸ் பண்றேன் பிக்பாஸ் என்றார்.
மகளிடம் இருந்து தகவல்
ரித்தியை இவ்ளோ மிஸ் பண்ணுவேன்னு தெரியவில்லை என்று கூறி கண்ணீர்விட்டார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ் ரித்தியிடம் இருந்து உங்களுக்கு ஒரு தகவல் வந்துள்ளது ரியோ என்றார்.
தத்தி தத்தி நடக்குறேன்
அது என்னவென்று கேட்காமலே கதறினார் ரியோ. பின்னர் பேச தொடங்கிய பிக்பாஸ், செவுத்த பிடிச்சு தத்தி தத்தி நடக்கிறேன். அப்பான்னு முதல் முறையா கூப்பிட்டிருக்கேன் என்று ரியோவின் மகள் சொல்வதாக சொன்னார்.
பிக்பாஸுக்கு நன்றி
இதனைக்கேட்ட ரியோ ரித்தி ஐ லவ் யூ என கதறினார், அம்மாவ நல்லா பாத்துக்குங்க.. என்ற அவர் நான் வெளியே வந்ததும் என்னையும் பார்த்துக்குங்க என்று கூறினார். மேலும் பிக்பாஸுக்கு நன்றி கூறிய ரியோ லவ் யூ பிக்பாஸ் என்றார்.
லவ் யூ டூ
அதற்கு வெல்கம் ரியோ என்ற பிக்பாஸ், லவ் யூ டூ என்று கூறி உச்சி குளிர வைத்தார் பிக்பாஸ். தொடர்ந்து பேசிய பிக்பாஸ் இப்போ நீங்க வெளியே போய், செய்து கொண்டிருந்த வேலையை தொடரலாம் என்றார். அதற்கு என்னைதான் செஞ்சாங்க என்று காமெடியாக கூறினார் ரியோ.