கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டார் ரியோ.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரியோ வந்த இரண்டாவது வாரத்திலேயே சவாலான போட்டியாளர் என கூறப்பட்டார். அந்த அளவுக்கு ஹவுஸ்மேட்டுகளை எண்டெர்டெயின் செய்து விளையாடினார்.

ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அவருடைய ஒரிஜினாலிட்டி தெரிந்தது. குரூப்பிஸத்தில் சிக்கி அன்பு கேங்கில் அடைக்கலம் ஆனார்.

ரியோவை காணவில்லை

ரியோவை காணவில்லை

தான் தான் டைட்டில் வின்னர் என்ற கனவில் இருந்தார் ரியோ. கடந்த வாரம் உள்ளே சென்ற எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ், ஆரிதான் வின்னர் என்று சொல்லியும் ரியோவின் பெயர் டேமேஜ் ஆனதையும் கூறி அவரை ஒரு வழியாக்கிவிட்டனர். இதனால் பழைய ரியோவை கடந்த சில நாட்களாக காணவில்லை.

அழைத்து வந்த ஷெரின்

அழைத்து வந்த ஷெரின்

இந்நிலையில் பிக்பாஸ் ஃபினாலேவில் மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டார். முதல் நபரான சோமை முகென் அழைத்து வந்த நிலையில் இரண்டாவது நபராக ரம்யாவை கவின் அழைத்து வந்தார். மூன்றாவது நபரான ரியோவை ஷெரின் அழைத்து வந்தார்.

ஆடிப்போன கமல்..

ஆடிப்போன கமல்..

முன்னதாக மேடைக்கு வந்த ஷெரின், கமலிடம் உள்ளே போய் யாரை வேண்டுமானாலும் கூட்டிட்டு வரலாமா என்று கேட்டார். இதனால் ஒரு கணம் ஆடிப்போனார் கமல். அதெல்லாம் இல்லை, அவர்கள் சொல்லும் நபரை தான் அழைத்து வர வேண்டும் என்றனர்.

Recommended Video

Aari யின் வெற்றியை பாராட்டிய Bigg Boss போட்டியாளர்கள் - Filmibeat Tamil
பெட்டிகளில் வெயிட்டிங்

பெட்டிகளில் வெயிட்டிங்

உள்ளே சாவியுடன் சென்ற ஷெரின், கார்டன் ஏரியாவில் இருந்த மூன்று பெட்டிகளை திறக்கும்படி கூறினார். இதில் மூன்று பேரும் தங்களின் பெட்டிகளை திறந்தனர். அதில் ஆரி மற்றும் பாலாஜியின் பெட்டிகளில் வெயிட்டிங் என இருந்தது. ரியோவின் பெட்டியில் எவிக்ட்டட் என்று இருந்தது.

மனசே இல்லாமல்

மனசே இல்லாமல்

ஏற்கனவே சோகமே உருவாய் இருந்த ரியோவின் முகத்தில் கூடுதல் சோகம் தொற்றிக் கொண்டது. 100 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த ரியோ, ஒவ்வொரு இடமாய் சென்று அமர்ந்து பார்த்தார். மனசே இல்லாமல் வேதனையுடன் வெளியே வந்தார் ரியோ.

மிஸ் பண்ணீங்களா?

மிஸ் பண்ணீங்களா?

முன்னதாக பாலாஜிக்கு பல பல்புகளை கொடுத்தார் ஷெரின். பாலாஜி இல்லாததால் எங்களுக்கு அம்மி கல் கொடுக்கவில்லை என்று டேமேஜ் செய்தார். தொடர்ந்து பிக்பாஸிடம் பேசிய ஷெரின், நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் நீங்க என்னை மிஸ் பண்ணீங்களா என்று கேட்டார்.

என்னோட வந்துடுறீங்களா?

என்னோட வந்துடுறீங்களா?

அதற்கு பதில் கூறிய பிக்பாஸ், அதை சொல்லித்தான் தெரியணுமா? நிச்சயமா நான் உங்களை மிஸ் பண்ணேன் என்றார் பிக்பாஸ். தொடர்ந்து பேசிய ஷெரின், நான் உங்களை கூட்டிட்டு போகலாமா? என்னோடு வந்துடுவீங்களா என்று கேட்டார். அதற்கு இதெல்லாம் பேராசை ஷெரீன் என்றார் பிக்பாஸ்.

சிரிப்பு பெருசா வருதே

சிரிப்பு பெருசா வருதே

மேலும் ரியோவையும், ஷெரினே உங்களை அழைத்து செல்ல போகப் போகிறார் சந்தோஷம்தானே என்றும் கேட்டார். அதற்கு ரியோ சிரித்ததும், இப்போ மட்டும் சிரிப்பு பெருசா வருதே என்று கேட்டு அவரையும் கலாய்த்து அனுப்பினார் பிக்பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X