அர்ச்சனாவின் பிக்பாஸ் வாரிசு என்பதை நிரூபிக்கும் ரியோ.. ஆரியிடம் அப்படியே முகத்தை காட்டி அட்டகாசம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பால் கேட்ச் டாஸ்க்கின் போது ஆரியிடம் அப்பட்டமாக முகத்தை காட்டினார் ரியோ.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றை டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ரியோ, சோம், கேபி, ரம்யா ஆகிய 4 பேர் ஒரு டீமாக உள்ளனர்.
இதேபோல் ஆரி, பாலாஜி, ஆஜித், ஷிவானி, அனிதா ஆகியோர் ஒரு டீமாக உள்ளனர். ஆரி உள்ள டீமுக்கு ஆரி கேப்டனாகவும் சோம் உள்ள டீமுக்கு சோம் கேப்டனாகவுனும் உள்ளது.

ஒவ்வொரு பந்துக்கும் பாயிண்ட்ஸ்
இந்த டாஸ்க்காக பிக்பாஸ் வீட்டில் பிரத்யோக செட் அமைக்கப்பட்டு அதில் மூன்று சைஸ்களில் நீல நிற பந்துகள் போடப்பட்டன. ஒவ்வொரு பந்துக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. பெரிய பாலுக்கு 20, மீடியம் பாலுக்கு 10, சின்ன பாலுக்கு 10 என மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

ரூல்ஸை மீறியதாக
இந்தப் பந்துகளை பிடித்து லீடிங்கில் இருந்தது சோமின் ஏ டீம். பால் வந்தப்போது ஏ டீமை சேர்ந்தவர்கள் ரூல்ஸை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தனது டீமை கேட்ட ஆரி, சோமிடமும் பேசினார்.

சீறிய ரியோ
அப்போது குறுக்கிட்ட ரியோ, இங்க வந்து கேள்வி கேட்கிறத விட்டுட்டு உங்க டீம்ல நடந்தத ஃபர்ஸ்ட் கேளுங்க என்று ஆரியிடம் முகத்தை காட்டினார் ரியோ. மேலும் பாலா செண்டர்ல நிக்கிறாப்ல பால் இங்க வர்றது கரெக்ட்டா தெரியுது.
Recommended Video

வேண்டுமென்றே தள்ளினாய்
பாலாவுக்கு பின்னால் ஆஜித் நிக்கிறாப்ல. நான் எப்படி நிற்பேன் என்று ஆரியிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் பாலாஜியிடமும் நீ வாண்ட்டடா தான் தள்ளிவிட்டாய் என்று ஆர்க்யூ செய்தார். டாஸ்க் தொடங்கியதில் இருந்தே வேற மாதிரி ஆகிவிட்டார் ரியோ.


Click it and Unblock the Notifications











