பயமுறுத்துறாரு.. வெறுப்ப உண்டாக்குறாரு.. அவருமேல கோபம்தான் அதிகமாகுது..ஆரி பற்றி புறணி பேசும் ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரி குறித்து கேபியிடம் புறணி பேசுகிறார் ரியோ.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ஓபன் நாமினேஷன் நடைபெறுவது தெரிந்தது. இதில் சோம் மற்றும் ரியோ ஆரியை நாமினேட் செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரியோ ஆரி குறித்து கேபியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆரி பற்றி பேசும் ரியோ
அதாவது டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் கேபி. அப்போது அவருக்கு அருகில் அமர்ந்து பேசும் ரியோ முழுக்க முழுக்க ஆரியை பற்றியே பேசுகிறார்.

பயமுறுத்துகிறார்
ஆரி புரோ பயத்தை கொடுக்கிறார்.. பயமுறுத்துகிறார். நீங்கள் என்னை இப்படி சொல்லிட்டிங்கள்ல.. இதுக்கு மக்கள் உங்களை என்ன தெரியுமா கேட்பாங்க அப்படின்னு சொல்லி பயமுறுத்துறார்.

சிம்பிளா சொன்னேன்
எல்லாரும் ஒன்னா சேர்ந்து விளையாடுற இடத்துல நீங்க வந்து சேரவே இல்லன்னு நான் சிம்பிளா சொன்னேன். அதுக்கு நான் 100 % உழைப்ப கொடுத்திருக்கேன். உழைப்ப வேலிடேட் பண்ணல.. குழந்தை வந்தப்போ டாஸ்க்ல இருந்தேன்னு எல்லாத்தையும் எடுத்துட்டு வர்றாரு.

வெறுப்ப உண்டாக்குறாரு
குழந்தை வந்தப்போ.. எனக்கு எதுவுமே தோனல.. அந்த குழந்தையோட அவ்ளோ பாசமா இருந்துச்சு.. ஆசையா விளையாடிட்டு இருந்தேன். இப்போ ஒரு மாதிரி வெறுப்ப உண்டாக்குறாரு.. அவரு பேசின சில வார்த்தைகள் எல்லாம் எனக்கு எக்ஸ்ட்ரா எனக்கு கோபம் தான் வருது.. இவ்வாறு கேபியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் ரியோ.

மூன்று பேர் தனியாக
அந்த நேரத்தில் கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து சோமிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஆரி. பாலாஜி, ஷிவானி, ரம்யா ஆகியோர் ஃபுளோரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











