twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்புள்ள ஆல்கஹாலிக்கே.. லெட்டர் டாஸ்க்கில் நாய்க்கும் சரக்குக்கும் கடிதம் எழுதி கலகலத்த ஹவுஸ்மெட்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸின் லெட்டர் டாஸ்க்கில் சரக்குக்கும் நாய்க்கும் லெட்டர் எழுதி ஹவுஸ்மெட்ஸ் கலகலத்தனர்.

    Recommended Video

    சாப்ட மட்டும் தெரியுமா? ரியோவில் அசிங்கபடுத்திய அனிதா | Bigg boss 4 Tamil

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹவுஸ்மெட்டுகளுக்கு லெட்டர் எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    அதாவது, ஹவுஸ்மெட்ஸ் தாங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைக்கும் ஒரு நபருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று கூறினார் பிக்பாஸ்.

    சொல்லாததை சொல்லி கொளுத்தி போட பார்த்த அனிதா.. வெளுத்துவிட்ட சனம்.. யாருக்கிட்ட!சொல்லாததை சொல்லி கொளுத்தி போட பார்த்த அனிதா.. வெளுத்துவிட்ட சனம்.. யாருக்கிட்ட!

    அன்புக்குரியவர்களுக்கு கடிதம்

    அன்புக்குரியவர்களுக்கு கடிதம்

    இதனை தொடர்ந்து ஹவுஸ்மெட்டுகளுக்கு பேப்பரும் பேனாவும் தனித்தனியாக ரைட்டிங் பேடுடன் கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட ஹவுஸ்மெட்ஸ் தனியாக அமர்ந்து தங்களின் அன்புக்குரியவர்களை நினைத்து கடிதம் எழுதினர்.

    தாரை தாரையாய்

    தாரை தாரையாய்

    கடிதம் எழுதும் போதே, அர்ச்சனா சம்யுக்தா ஆகியோர் தாரை தாரையாய் கண்ணீர் வடிக்க தொடங்கி விட்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக ஹவுஸ்மெட்ஸ் தாங்கள் எழுதிய கடிதங்களை படிக்குமாறு கூறினார் பிக்பாஸ். அதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் தங்களின் கடிதங்களை படிக்க தொடங்கினர்.

    மகனுக்கு கடிதம்

    மகனுக்கு கடிதம்

    முதல் நபராய் கடிதத்தை படிக்க தொடங்கினார் சம்யுக்தா. தனது மகன் ரேயனுக்கு கடிதம் எழுதிய சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்மா அழுவதை பார்த்து கவலைப்படக் கூடாது. அம்மா சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் எனறார்.

    பாலாஜி கடிதம்

    பாலாஜி கடிதம்

    ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆரி ஆகியோர் தங்களின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கடிதம் எழுதினர். தனது அம்மாவுக்கு கடிதம் எழுதிய பாலாஜி ஒரு தீபாவளியாவது உங்களுடன் கொண்டாடியிருக்கலாம் என தோன்றுகிறது என உருக்கமாக பேசினார்.

    அம்மாவுக்கு கடிதம்

    அம்மாவுக்கு கடிதம்

    இதேபோல் நிஷாவும் ரம்யா பாண்டியனும் தங்களின் அம்மாவுக்கு கடிதம் எழுதினர். அதில் தீபாவளி நாளில் அம்மாவின் கறிக்குழம்பையும் விருந்தையும் மிஸ் பண்ணுவேன் என தங்களின் அம்மாக்களுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    கண்ணீர்விட்ட அர்ச்சனா

    கண்ணீர்விட்ட அர்ச்சனா

    அர்ச்சனா தனது மகளை நினைத்து உருக்கமாக கடிதம் எழுதினார். நிலாவிடம் பேசுவதையும் நட்சத்திரங்களில் அவரை தேடுவதையும் கவிதை தொனியில் ரொம்பவே உருக்கமாக தான் எழுதிய கடிதத்தை வாசித்து கண்ணீர்விட்டார்.

    வாக்கிங் கூட்டிட்டு போறேன்

    வாக்கிங் கூட்டிட்டு போறேன்

    தொடர்ந்து தனது நாய், குட்டிக்காக எழுதிய கடித்தை வாசித்தார் சோக சேகர். நீ என்னிடம் வரும்போது குட்டியாய் இருந்ததால் குட்டி என்று பெயர் வைத்தேன். இப்போது வந்திருந்தால் குண்டு என்று வைத்திருப்பேன். வெடி சத்தத்தை கேட்டு பயந்துபோய் ஒளிந்து கொள்ளாதே அம்மாவுடன் டிவியில் என்னை பார். அதிகம் ஸ்வீட் சாப்பிடாதே முடி கொட்டும். டாடி வந்து உன்னை வாக்கிங் கூட்டி செல்கிறேன் என்றார்.

    அன்புள்ள ஆல்கஹாலிக்கே..

    அன்புள்ள ஆல்கஹாலிக்கே..

    அவரை தொடர்ந்து தனது கடிதத்தை வாசித்தார் ரியோ. ஆரம்பிக்கும் போதே, அன்புள்ள ஆல்கஹாலிக்கே என அலறவிட்டார். உன்னுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட பிறகு எந்த பண்டிகையும் நீயில்லாமல் கொண்டாடியது இல்லை. நீ எனக்குள் போன பிறகு என் நட்பு பல மடங்கு பெருகும் என்று கூறிய தனது மகளுடனான தீபாவளியை மிஸ் செய்வதாக கூறினார.

    English summary
    Rio has written letter to Alcohol in Biggboss letter task. And Soma sekhar has written a letter to his pet dog.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X