Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. மொட்டை அங்கிளை கட்டம் கட்டும் ரியோ.. வெளியானது அதிரடி புரமோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் இருப்பதாக கூறியது குறித்து சுரேஷ் சக்கவர்த்தியிடம் ரியோ கெடுப்பிடியாக விசாரிக்கும் புரமோ வெளியாகியுள்ளது.
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் சண்டைக் கோழிகளான அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் டூயட் ஆடுவது காட்டப்பட்டது.
சின்ன மச்சான் பாடலுக்கு இருவரும் செம க்யூட்டாக டான்ஸ் ஆடினர். இதனை பார்த்து ஹவுஸ்மேட்ஸ்கள் ஜாலியாக இருப்பது தெரிந்தது.
அடேய்.. என்னடா இதெல்லாம்.. ஆடவிட்டு வேடிக்கை காட்றீங்களா.. பிக்பாஸ் புரமோவால் அப்செட்டான ரசிகாஸ்!
ஃபிரி பாஸ் டாஸ்க்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக உள்ளது. அதாவது எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கின் போது, தனது தரப்பு வாதத்தை சொல்ல வீட்டிற்குள் குரூப்பிசம் இருப்பதாக கூறினார்.
டிவியில் ஒளிபரப்பிய பிக்பாஸ்
மேலும் தான் கார்னர் செய்யப்படுவதாக கூறிய சுரேஷ், அதற்கு எடுத்துக்காட்டாக பிக்பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களை கூறினார். இந்தக் காட்சிகள் அனைத்தும் பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
வேல்முருகன் ஆவேசம்
இதனை பார்த்த ரியோ, அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் கொந்தளித்தனர். அதோடு வெளியே வந்த சுரேஷ் சக்கரவர்த்தியையும் அவர்கள் கட்டம் கட்டினர். வேல்முருகன், சுரேஷ் சொன்னதை புரிந்து கொள்ளாமல் லபோ திபோ என்று கத்தி ஆவேசப்பட்டார்.
முகத்திரை கிழிக்கப்பட்டது
ரியோ, பக்கா குரூப்பிசம் செய்தார். அனிதா, சனம் ஷெட்டி, ரியோ என ஆளாளுக்கு அவரவர் பங்குக்கு சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்தனர். இதன் மூலம் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக புரமோ வெளியாகியுள்ளது.
குரூப்பிசம் இருக்கு..
அந்த புரமோவில் லிவிங் ஏரியாவில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் குரூப்பிஸம் இருக்கு என்று சொன்னது குறித்து கெடுபிடியாக விசாரிக்கிறார். அதற்கு ஆமாம் பேர் சொல்ல விரும்பல.. நிறைய குரூப்பிஸம் இருக்கு என்கிறார் சுரேஷ். என்னைதான் சொல்கிறீர்கள் என்று பச்சையாக தெரிகிறது என எகிறுகிறார் ரியோ.
வீக் ஆக்கவில்லை
உடனே குரூப்பிசம் இருக்குன்னு நான் நினைக்கிறேன்னு நீங்க சொல்றீங்கள்ல என விஷயத்தை விளக்க ஆரம்பிக்கிறார். நீங்களும் நிஷாவும் வெளியே இருந்தே ஃபிரண்ட்ஸ்.. நீங்கள் எல்லோரும் செய்த எதுவும் என்னை வீக் ஆக்கவில்லை என்கிறார் சுரேஷ்.
இரண்டாவது புரமோ
அதற்கு வழக்கம் போல் தனது முகத்தை டெரராக வைத்துக்கொண்டு நாங்கள் எல்லோரும் உங்களை என்ன செய்தோம் என கேட்கிறார் ரியோ. இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னுமாடா அந்தப் பஞ்சாயத்து தீரவில்லை என கேட்டு வருகின்றனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்