இதுக்கு மேல பொறுக்க முடியாது ஓடிடிக்கு செல்லும் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும்?

சென்னை : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ரியோ ராஜ்.

Recommended Video

இந்த படத்துல ROMANCE கிடையாது | CLOSE CALL WITH RIO RAJ, REMYA CHAT PART - 02| FILMIBEAT TAMIL

பானா காத்தாடி, செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தொடர் லாக்டவுனால் தியேட்டரில் வெளியாவது சிரமம் என்பதால் பிளான் பண்ணி பண்ணனும் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என கூறப்படுகிறது.

பெண் ரசிகைகள்

பெண் ரசிகைகள்

அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த தொகுப்பாளராக சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்த ரியோ அதைத்தொடர்ந்து விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சியில் ஹீரோவாக நடித்து பெரும் புகழைப் பெற்றார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக உருவாகினர்.

ஹீரோவாக கால் பதித்தார்

ஹீரோவாக கால் பதித்தார்

இந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவிலும் ஹீரோவாக கால் தடத்தை பதித்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் பக்கத்தில் 2019 ல் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற கலக்கலான காமெடி படத்தில் நடித்து ஹீரோவாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

காமெடி கதையை

காமெடி கதையை

பானா காத்தாடி, செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த முறையும் காமெடி கதையை கையில் எடுத்திருக்கும் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், தங்கதுரை, பாலசரவணன், முனிஸ்காந்த், சந்தானபாரதி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ட்ரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது.

ஹாட்ஸ்டார் தளத்தில்

ஹாட்ஸ்டார் தளத்தில்

முழுக்க முழுக்க காமெடியுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருப்பதால் தியேட்டரில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இனியும் வெளியீட்டு தேதியை தள்ளி போட முடியாது என ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்ப படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X