உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
சென்னை: பிக்பாஸ் பிரபலமான ரியோ ராஜ் கமலுடன் எடுத்த போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உருக்கமாக டிவிட்டியுள்ளார்.
தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் குரூப்பிஸம் இல்லை என்று அடித்து பேசிய ரியோ, அன்பு கேங்கிலேயே அடைக்கலமாகிவிட்டார்.

குட்டி சினேகன்
அதோடு சக பெண் போட்டியாளர்களை எதற்கெடுத்தாலும் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதனால் அவரை குட்டி சினேகன் என்றும் கட்டிப்பிடி வைத்தியர் என்றும் அழைத்து வந்தனர்.
Recommended Video

சமூக வலைதளங்களில்..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரியோ தனது குடும்பத்துடன் காட்டுக்கு சென்றார். அந்த போட்டோக்களை எல்லாம் தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்தார்.
நிறைய கற்றுக்கொண்டேன்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ரியோ. மேலும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன் சார். எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் அது. என்னை ஊக்கப்படுத்தியதற்கும் உங்களின் கேர், லவ், மற்றும் அறிவுரைக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

பிளான் பண்ணி பண்ணனும்
இதனை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர் ரியோ என கூறி வருகின்றனர். மேலும் பலர் என்ன திடீர் சந்திப்பு என்றும் கேட்டு வருகின்றனர். ரியோ தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.


Click it and Unblock the Notifications











