பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ரியோ முதல் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss Rio Raj First exclusive video | உங்க அன்புக்கு நன்றி - Filmibeat Tamil

விஜே, சின்னத்திரை நடிகர், ஹீரோ என பல முகங்களை கொண்டவர் ரியோ ராஜ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இரண்டாவது ரன்னர் அப் ஆகி மூன்றாவது இடத்தை பிடித்தார் ரியோ.

ஒப்புக்கொள்ளவில்லை

ஒப்புக்கொள்ளவில்லை

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு முதல் ஆளாய் குரூப்பிஸத்துக்குள் நுழைந்தவர் ரியோதான். ஆனால் கடைசி வரை அதனை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

அன்பு கேங்கே கதி..

அன்பு கேங்கே கதி..

அர்ச்சனா வரும் வரை ஜாலியாக ஹவுஸ்மேட்ஸ்களையும் பார்வையாளர்களையும் எண்டெர்டய்ன் செய்து வந்த ரியோ, அர்ச்சனா வந்த பிறகு அன்பு கேங்கே கதி என்று இருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சனத்துக்குள்ளானார்.

கட்டிப்பிடித்த ரியோ

கட்டிப்பிடித்த ரியோ

ரியோ நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று என்று இருந்ததாலும், பல விஷயங்களை புரியாமல் பேசியதாலும் அவரை கோமாளி என்றும் அழைத்தனர் நெட்டிசன்கள். அதோடு என்ன விஷயமாக இருந்தாலும் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கட்டிபிடி வைத்தியர்..

கட்டிபிடி வைத்தியர்..

இதனால் குட்டி சினேகன், கட்டிப்பிடி வைத்தியர் என்றும் விமர்சிக்கப்பட்டார் ரியோ. இந்நிலையில் ஃபினாலே வாரத்தின் போது வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் ரியோ சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவதை அவரிடம் தெரிவித்தனர்.

ரியோவின் பிளான்

ரியோவின் பிளான்

மேலும் வெளியில் ஆரிக்கு இருந்த வரவேற்பையும் கூறினர். இதனால் நொந்து போன ரியோ அதன் பிறகு இருக்கும் இடம் தெரியாமலே இருந்தார். போதா குறைக்கு 10 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறலாம் என்று எண்ணியிருந்தார் ரியோ.

அப்செட் ஆனார் ரியோ

அப்செட் ஆனார் ரியோ

ஆனால் 5 லட்சம் ரூபாய் வந்ததுமே பெட்டியை எடுத்துக்கொண்டார் கேபி. அவரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார் ரியோ. எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் ரொம்பவே அப்செட் ஆனார் ரியோ.

காணாமல் போன ரியோ

காணாமல் போன ரியோ

அதன் பிறகு சோகமே உருவாய் பிக்பாஸ் வீட்டுக்குள் சுற்றி வந்தார். சக ஹவுஸ் மேட்ஸ், கமல், பிக்பாஸ் என பலரும் ரியோவை காணவில்லை என்றே கூறினர். அந்த அளவுக்கு இருக்கும் இடம் தெரியாமல் போனார் ரியோ.

மகளுடன் கொஞ்சல்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த ரியோவுக்கு குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்கவும் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். 100 நாட்களுக்கு பிறகு பார்த்த தனது செல்ல மகளை கொஞ்சி மகிழ்ந்தார் ரியோ.

 அழகான பயணமாக இருந்தது

அழகான பயணமாக இருந்தது

அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், முதல் முறையாக மனம் திறந்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரியோ. அதில் அவர் பேசியிருப்பதாவது, எல்லோருக்கும் வணக்கம்! நான் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறேன். பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான நல்ல பயணமாக இருந்தது.

நிறைய வேலை இருக்கிறது..

நிறைய வேலை இருக்கிறது..

அதை நான் வெளியில் வந்து பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். நீங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் அன்பை வெளியில் வந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றி. இனிமேல் நிறைய வேலை இருக்கிறது.

பழைய ரியோவாக..

பழைய ரியோவாக..

அதை எல்லாவற்றையும் பிளான் பண்ணி பண்ணலாம். இந்த அளவுக்கு எனக்கு பாசிட்டிவிட்டி கொடுத்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி' இவ்வாறு சிரித்த முகத்துடன் பழைய ரியோவாக பேசியுள்ளார். ரியோவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X