For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிஷாவை சோபாவில் தள்ளிவிட்ட ரியோ.. அடப்பாவிகளா.. இதைப் போய் அன்சீன்ல வச்சிட்டீங்களே!

  |

  சென்னை: ரம்யா பாண்டியனை அலேக்கா தூக்கி சுத்தினாரே ரியோ, அவருடன் தான் இன்னைக்கு டூயட் பாடி ஆடுவாருன்னு பார்த்தா, நிஷா அக்கா கூட ரொமான்ஸ் பண்றாரு.. அட போங்க பாஸ்!

  Bigg Boss 4 Tamil அத போட மறந்துட்டீயே Ajeedh • Day 10 | 14th October

  பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் சில எடிட் செய்யப்பட்ட காட்சிகள், அன்சீனாக விஜய் மியூசிக்கில் இரவு 10.30 மணிக்கு மேல் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மறு நாள் பிக் பாஸ் ரசிகர்களை, தூங்கி எழுந்து அதனை கண்டு ரசிக்கலாம்.

  3வது புரமோல அந்த சீன் கவனிச்சீங்களா? இன்னைக்கு இவர் தான் ஜெயிச்சு அவரை சேஃப் பண்ண போறாரு!

  அன்சீன் புரமோ

  அன்சீன் புரமோ

  விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் வெளியாவதை போல, அன்சீன் புரமோ வீடியோக்கள் விஜய் மியூசிக் ட்விட்டர் ஐடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள அன்சீன் புரமோவை பார்த்தால், நிச்சயம் வயிறு குலுங்க சிரிப்பது உறுதி. ஆனால், இதை போய் அன்சீன்ல வச்சிட்டீங்களே பிக் பாஸ்..

  ரம்யாவுடன் இல்லை

  ரம்யாவுடன் இல்லை

  ஹீரோ ஆனாலும், பிக் பாஸ் வீட்டில திருமணம் ஆன காரணத்தினால், கொஞ்சம் நல்லாவே அடக்கி வாசித்து வருகிறார் நம்ம நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா பட ஹீரோ ரியோ. பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வரும் இவர், ரம்யா பாண்டியனை நேற்று தூக்கி சுத்தியதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், இன்னைக்கு அவருடன் ரியோ ஜோடி போட்டு ஆடவில்லை.

  குடியிருந்த கோயில்

  குடியிருந்த கோயில்

  ரம்யா பாண்டியன் மிஸ் ஆன நிலையில், ரியோவுக்கு ஜோடியாக அறந்தாங்கி நிஷா செம மேக்கப் போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற "ஆடலுடன் பாடல்" பாட்டுக்கு இருவரும், அதே போன்ற சிங் காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுறாங்க.

  கோபால்.. கோபால்

  கோபால்.. கோபால்

  எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் ரியோ ராஜை சிவாஜின்னு நினைச்சுக்கிட்டு, கோபால்.. கோபால் என்னை காதலித்தால் என நிஷா அக்கா பண்ணும் ரொமான்ஸை அன்சீனில் பார்த்த ரசிகர்கள், இதையெல்லாம் இன்றைய நிகழ்ச்சியிலேயே போட்டு இருக்கலாமே.. நைட் ஃபுல்லா தூங்க விடமாட்டீங்களாடா என புலம்பி வருகின்றனர்.

  சோபாவில் தள்ளி விட்ட ரியோ

  சோபாவில் தள்ளி விட்ட ரியோ

  நேற்றைய எபிசோடில் சோபாவை அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய ரியோ ராஜ், இன்றைய எபிசோடில் நிஷா அக்காவை சோபாவில் தள்ளிவிட்டு, பிக் பாஸ் எப்ப இந்த டாஸ்க் முடியும், சீக்கிரம் இந்த டிரெஸ்ஸை கழட்டிப் போடணும் என கெஞ்சும் படியாக இந்த புரமோ நொடிக்கு நொடிக்கு சிரிப்பலைகளை உருவாக்கி உள்ளது.

  ஷிவானி யாருக்கு ஜோடி

  ஷிவானி யாருக்கு ஜோடி

  மொட்டை தல சுரேஷுக்கு ஜோடியா அனிதா சம்பத் சின்ன மச்சான் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிற நிலையில், ஷிவானி நாராயணன் யார் கூட ஆடப் போறாங்க என்றும், ரம்யா பாண்டியன் ஜோடி யார் என்கிற கேள்விகளும் தான் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.

  English summary
  Bigg Boss Tamil 4 unseen promo out now in Vijay Music just now. Rio Raj and Nisha will paired up for Kudiyiruntha Kovil song.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X