பேச்சுப் பேச்சாத்தான் இருக்கணும்.. மொட்டை அங்கிளுடன் சமரசம் பேசும் ரியோ.. விட்டா அழுதுடுவார் போல!

சென்னை: எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸுக்கான இருட்டு அறையில் முரட்டு குத்து குத்திய மொட்டை தல சுரேஷை டிவியில் பார்த்தும் எதுவுமே செய்யாமல் விட்ட ரியோ, இப்போ பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கின என்றே சொல்லலாம்.

Recommended Video

Bigg Boss 4 Tamil | Day 10 | 14th October Episode

குரூபிஸம் பண்றாங்க என பழி சொன்ன அவரிடம், ஐயா, சாமி உங்களுக்கு என்ன பிரச்சனை என பஞ்சாயத்து பேசிய காட்சிகள் செம சிரிப்பாக இருந்தன.

ரியோ போட்ட சீனை எல்லாம் பார்த்து மிரண்ட ரசிகர்கள், இவரு மாஸ் இல்ல தமாசு என கலாய்த்து வருகின்றனர்.

ரியோவின் முகத்திரை

ரியோவின் முகத்திரை

சும்மா ஜாலியா பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பாரு ரியோ என ரசிகர்கள் நினைக்கக் கூடாது. அவருக்கு இன்னொரு ஃபேஸ் இருக்கு என ரியோவின் முகத்திரையை கிழிக்கப் போவதாக மொட்டை தல சுரேஷ் பேசி, ரியோவை கொஞ்சமாக காண்டு ஏத்தினார். அதற்கான எதிர்வினையை இன்னமும் ரியோ ஆற்றவில்லை.

சண்டை போடுவாருன்னு பார்த்தா

சண்டை போடுவாருன்னு பார்த்தா

ரியோ ராஜ் பற்றி அவர் இதை பார்க்க மாட்டார் என நினைத்துக் கொண்டு, ரம்யா பாண்டியன் மற்றும் ஆஜீத்திடம் அந்த இருட்டு அறையில் மொட்டை தல சுரேஷ் வச்சு விளாசினார். இதை போட்டுக் காட்டினாலாவது பெரிய சண்டை வரும் என நினைத்த பிக் பாஸுக்கு கடைசியில் ரியோ அல்வா கொடுத்து விட்டு ரம்யா பாண்டியனை தூக்கி சுற்றினார்.

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்

இன்னைக்காவது அந்த பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு வரும், பெரிய சம்பவம் நடக்கும் சரித்திரம் நடக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, பிக் பாஸுக்கு பதிலாக ஜோடி நம்பர் ஒன் புரோகிராமை மாற்றி எழுதி விட்டார் இயக்குநர். இடையே, அதை மறந்துட்டோமே என ரியோ மற்றும் சுரேஷுக்கு பேச்சுவார்த்தை பஞ்சாயத்து நடந்து முடிந்தது.

அப்படி நினைக்காதீங்க

அப்படி நினைக்காதீங்க

இங்கே நாங்க குரூபிஸம் பண்றோம்னு நினைக்காதீங்க, உங்களுக்கு பெட் வாங்கி தரத் தான் நிஷா அக்கா கூட பேசினேன் பழகினேன் என அண்ட புழுகும் ஆகாச புழுகையும் ரியோ அளந்து விட்டார். பின்னர், நாம பழம் விட்டுக்குவோம் என்கிற ரேஞ்சில் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டு அந்த பிரச்சனைக்கு எண்ட் கார்டு போட்டு விட்டனர்.

இதுக்குத்தான் அவ்ளோ வாயா

இதுக்குத்தான் அவ்ளோ வாயா

ரியோ மாஸா இறங்கி அடிப்பாருன்னு காத்திருந்த ரசிகர்களுக்கு, கடைசியா கமருக்கட்டு கொடுத்துட்டாரு பிக் பாஸ். நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளைங்க என்கிற ரேஞ்சிலேயே இன்னமும் போய்ட்டு இருக்காரு. மொட்டை தலைல கிஸ் பண்ண வா என சுரேஷ் கூப்பிட்டதும் அவரை கட்டிப் பிடித்துக் கொண்ட ரியோவை பார்த்து ரசிகர்கள் காரி துப்பாத குறையாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X