குரூப்புல டூப்பு ரியோ.. கூட்டத்துல இருந்த கருப்பு ஆடே அவர் தான்.. கண்டுபிடித்து சுளுக்கெடுத்த கமல்!

சென்னை: புதிய மனிதா டாஸ்க்கில் ஒரு டீமில் இருந்து கொண்டு இன்னொரு டீமுக்கு யாராவது ஃபேவரிஸம் பண்ணாங்களா? எனக் கேட்டு கமல் ரியோவின் வாயை பிடுங்கி விட்டார்.

ரியோ கையை தூக்கி தானாக மாட்டிக் கொண்டாலும், சேஃபா வேற விஷயங்களை மட்டுமே பேசினார்.

பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி ரியோ, தான் இருந்த டீமை விட்டுவிட்டு, அடுத்த டீமுக்காக ஃபேவரிசம் காட்டினார் என்று போட்டுக் கொடுக்க ரியோவின் நிலைமை கவலைக்கிடம் ஆனது.

குரூபிச குமாரு

குரூபிச குமாரு

பிக் பாஸ் வீட்டில் குரூப்பாக விளையாடி விட்டு அப்படியே டைட்டிலை தட்டித் தூக்கிக் கொண்டு போகலாம் என நினைத்து விளையாடி வருகிறார் ரியோ ராஜ். ரியோவுக்கு குரூபிச குமாரு என்றே பட்டப்பெயர் வைத்து விட்டார்கள் நெட்டிசன்கள். அவர் பண்ணும் ஃபேவரிஸம் அவரை அறியாமலே பண்ணுவது போல நல்லாவே நடிக்கிறார்.

ஒப்பனா சொன்ன பாலா

ஒப்பனா சொன்ன பாலா

ஒரு டீமில் இருந்து கொண்டு இன்னொரு டீமுக்காக விளையாடியது யார் என்ற கேள்வியை கமல் கேட்டதும், ரியோ அப்படி பண்ணாருன்னு எனக்கு தோணுது சார் என்று சொன்ன பாலா, அர்ச்சனாவை சேஃப் பண்ண, ரியோ ரொம்பவே மெனக்கெட்டு விளையாடியது போல தெரிந்தது என்றார்.

எதிரியான ஆரி

எதிரியான ஆரி

அர்ச்சனாவுக்கு ஃபேவராக அவரை காப்பாற்றும் விதமாக ஏகப்பட்ட முயற்சிகளை நட்பு ரீதியாக ரியோ ராஜ் எடுத்தார் என ஆரியும், ரியோவின் தவறுகளை கமலுக்கு முன்னால் சுட்டிக் காட்டினார். அர்ச்சனா, கேபி மற்றும் ரியோ டீம், ஆரியை அப்படியே தங்களது முதல் எதிரியாக பார்க்க தொடங்கி விட்டனர்.

கேபி கிட்ட என்ன சொன்னீங்க

கேபி கிட்ட என்ன சொன்னீங்க

கமல் அந்த டாப்பிக்கை ஆரம்பித்து வைத்தும், யாருமே ரியோவும் கேபியும் பேசிக் கொண்டது பற்றி சொல்லவில்லை. கேபி கிட்ட கார்டன் ஏரியாவில் பிரேக்கில் இருக்கும் போது என்ன சொன்னீங்க என கமல் குறிப்பிட்டு கேட்டு ரியோவை வசமாக சிக்க வைத்தார். ஆரியிடம் இருந்து கேபியை காப்பாற்ற ரியோ போராடியதை போட்டுக் கொடுத்து விட்டார் கமல்.

நோ குறும்படம்

நோ குறும்படம்

விஜய் டிவி செல்லப்பிள்ளைகளை காப்பாற்றும் விதமாக ரியோ பேசியதை குறும்படமாக கமல் போட்டுக் காட்டவில்லை. அப்படி போட்டுக் காட்டி இருந்தால் தான் ரியோவுக்கு உரைத்து இருக்கும். பாலாஜி முருகதாஸ் தப்பு பண்ணா, சம்யுக்தா தப்பு பண்ணா, உடனே குறும்படம் போட்டுக் காட்டுறார் கமல் சார். இந்த ரியோவுக்கு ஒரு குறும்படம் கூட போட்டுக் காட்ட மாட்டேங்கிறாரோ என ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X