Don't Miss!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- News 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகளுக்கு நாளை தேர்தல்! 2019 முடிவை எதிர்க்கட்சிகள் முறியடிக்குமா?
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மத்தவங்க எப்படின்னு தெரியல.. கமல் கிட்ட சொன்னதை செய்து காட்டிய ரியோ ராஜ்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4ம் சீசன் போட்டியாளர் ரியோ ராஜ் உலகநாயகன் கமலிடம் சொன்னது போலவே தற்போது காட்டுக்குச் சென்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே வாரத்தில் கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் என்ன பிளான் எனக் கேட்டார்.
தீராத பஞ்சாயத்து.. தவறை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில்.. இன்றும் வாங்கிக்கட்டும் பாலாஜி!
மேலும், கிராண்ட் ஃபினாலேவில் ரியோ ராஜுக்கு டென்ட் ஒன்றையும் கமல் பரிசளித்தார்.
என்ன பிளான்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் யார் யார் என்ன பிளான் வச்சிருக்கீங்கன்னு கமல் கேட்டதற்கு, பாலாஜி முருகதாஸ் கோவா போகப் போறேன் சார் என்றார். ரியோ ராஜ் காட்டுக்குப் போகணும் சார் என்றார். ஆரி குழந்தையிடம் நேரத்தை செலவழிக்கப் போகிறேன் என்றும் ரம்யா பாடி மசாஜ் தேவை என்றும், சோம் தனது குட்டாவுடன் வாக்கிங் போகணும் என்றும் கூறினார்.
கேரளா டூர்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பாலா கோவாவுக்கு போனாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால், சோமசேகர் உடனடியாக கேரளாவுக்கு டூர் அடித்தார். அங்குள்ள குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் சோமசேகர்.
|
காட்டில் ரியோ
ரியோ ராஜ் காட்டுக்கு போகப் போறேன் என சொன்னதை நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில், தற்போது கமல்ஹாசனிடம் சொன்னது போலவே காட்டுக்கு போகும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் நடிகர் ரியோ ராஜ்.
எந்த இடம்
To Another World என காரில் காட்டுக்குள் பயணிக்கும் வீடியோவை மட்டுமே வெளியிட்டுள்ள ரியோ ராஜ் எங்கே போகிறார், எந்த இடம் என்றும் ஏதும் சொல்லவில்லை. கமெண்ட்டில் சில ரசிகர்கள் ஊட்டி என பதிவிட்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் இருந்த நிலையில், மன நிம்மதிக்காக சொன்னதை போலவே காட்டுக்கு போயுள்ளார் ரியோ.
|
பிளாக்ஷீப் டீம் வரவேற்பு
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை பிளாக்ஷீப் டீமுடன் இணைந்து ரியோ ராஜ் பண்ணிய நிலையில், அந்த டீமை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து நடிகர் ரியோ ராஜுக்கு உற்சாகமாக அளித்த வரவேற்பு வீடியோவும் வைரலாகி வருகிறது. விரைவில் ரியோ நடிப்பில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாய வீடியோ வருமா
காட்டுக்குப் போறேன்னு சொன்ன ரியோ ராஜ் காட்டுக்கு சென்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். கோவாவுக்குப் போறேன் என்றும், விவசாயம் பண்ண போறேன் என்றும் சொன்ன பாலாஜி முருகதாஸ், அது தொடர்பான வீடியோக்களை சீக்கிரம் வெளியிடுவாரா? என பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.