ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் என்டர்டெயினரான ரியோ ராஜ் வீட்டுக்கு சென்றதும் தனது அன்பு மகள் ரிதியை தூக்கிக் கொஞ்சும் அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

சென்னை: மகளிடம் கொஞ்சி விளையாடிய ரியோ.. பாச வீடியோ..!

கடைசி வரை ரியோவுக்கு டைட்டில் கிடைக்குமா? ரன்னர் அப் ஆவாரா? என ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்த நிலையில், இரண்டாவது ரன்னர் அப் ஆனார் ரியோ ராஜ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் ரியோ சோகமாக இல்லாமல் இருந்திருந்தாலே பாலாஜியை பின்னுக்குத் தள்ளி இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஹீரோ ரியோ

ஹீரோ ரியோ

பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் ஹீரோவாக நடித்து போட்டியாளர்களாக மாறியவர்கள் ஆரி அர்ஜுனன் மற்றும் ரியோ ராஜ் மட்டுமே. சன் மியூசிக் விஜே, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன் என மீடியாவில் கலக்கிய ரியோ, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் மூலம் ஹீரோவானார்.

பிளான் பண்ணி பண்ணனும்

பிளான் பண்ணி பண்ணனும்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் நல்ல ஓப்பனிங்காக ரியோவுக்கு இருந்த நிலையில், இயக்குநர் பத்ரியுடன் இணைந்து பிளான் பண்ணி பண்ணனும் படத்திலும் நடித்து விட்டுத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் ரியோ ராஜ். அந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்றும் பிக் பாஸ் வீட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மைண்ட் கேம்

மைண்ட் கேம்

ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜ் தான் நிகழ்ச்சிக்கு முன்பாகவே ஏகப்பட்ட ரசிகர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை அணுகினர். மேலும், இருவரும் ஆரம்பத்தில் இருந்தே செம மைண்ட் கேம் ஆடினர். இம்சை அரசன் கெட்டப் எல்லாம் போட்டுக் கொண்டு ரியோ விளையாடிய போது, அவரது மனவலிமை தெளிவாக தெரிந்தது.

அப்செட் ஆக்கியது

அப்செட் ஆக்கியது

பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி அர்ஜுனன் சொன்ன குரூபிசம் என்கிற வார்த்தை தான் ரியோ ராஜின் மன வலிமையை சுக்கு நூறாக உடைத்தது. யாரையும் காயப்படுத்தக் கூடாது என நினைக்கும் அவரது குணமும் அவரது விளையாட்டுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. மேலும், அர்ச்சனா, நிஷாவுடன் சேர்ந்து கொண்டு அன்பு கேங்கில் ஐக்கியமாகி விட்டார் ரியோ என்கிற ட்ரோலும் ரியோவை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

ஆரிக்கு முன்பே

ஆரிக்கு முன்பே

ஆரி அர்ஜுனன் நாமினேஷனுக்கு வந்த போதெல்லாம் அதிக மக்கள் ஓட்டுக்கள் பெற்று சேவ் ஆனது அவர் தான். ஆனால், கோழி, நரி டாஸ்க் நடந்த வாரத்தில் நேர்மையாக விளையாடிய ரியோ, ஆரிக்கு முதலாக சேவ் ஆகி கெத்து காட்டினார். அதே போல, டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிலும் ரியோவின் கேம் ஆரி மற்றும் பாலாவை வியக்க வைத்தது.

சிரிப்பு போச்சு

சிரிப்பு போச்சு

கடைசி வாரத்தில் முதலாவதாக வந்த அர்ச்சனா, நிஷா உள்ளிட்ட அன்பு கேங், என்ன சொன்னார்களோ தெரியவில்லை. ரியோ ராஜின் ஒட்டுமொத்த சிரிப்பும் காணாமல் போனது. கடைசி வரை ரியோவை சிரிடா சிரி.. என கமல், ரியோவின் மனைவி ஸ்ருதி, வீட்டுக்குள் வந்த கவின் என அனைவரும் அதையே சொல்லி ரியோவை தேற்றினார்கள்.

ரியோவும் ரிதியும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆனதும் தான் ரியோ ராஜுக்கு சிரிப்பே வந்தது. ஒவ்வொரு போட்டியாளர்களும் வீட்டுக்கு போகும் போது அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ரியோ தனது மகள் ரிதி பாப்பாவை தூக்கி கொஞ்சும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீட்டுக்குப் போகணும்

வீட்டுக்குப் போகணும்

அர்ச்சனா மற்றும் நிஷா உள்ளே வந்து பேசிய பிறகு, ரியோவின் மைண்ட் முழுவதும் வின் பண்ணனும் என்கிற எண்ணம் மாறி, வீட்டுக்குப் போகணும் என்கிற எண்ணம் உருவாகி விட்டது. அதன் காரணமாகவே கேபி 5 லட்சம் பரிசு பெட்டியை எடுக்கும் போது, தனக்கு அது வேண்டும் என்றார். ஏன் என அவர் கேட்கும் போது, வீட்டுக்குப் போகணும் என்பதையே பதிலாக ரியோ சொன்னது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு வெடித்து

ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு தனது மனைவி ஸ்ருதியுடன் வீட்டுக்குப் போகும் போதே அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து ரோஜாப்பூ மாலை போட்டு வேற லெவலில் ரியோவை வரவேற்ற வீடியோவும் வைரலாகி வருகிறது. ரியல் என்டர்டெயினர் ரியோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X