பிக்பாஸில் சமத்தாய் என்ட்ரி கொடுத்துள்ள ரியோ ராஜ்.. அப்போ செம என்டெர்டெய்ன்மென்ட் இருக்கு!
சென்னை: விஜேவும் நடிகருமான ரியோ ராஜூம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பிரபல தொலைக்காட்சிகளில் விஜேவாக பணிபுரிந்துள்ளார் ரியோ.
தொலைக்காட்சித் துறையில் ரியோவின் அறிமுகமானது 'கானா கானும் காலங்கள் - கல்லூரி சாலை சீரியலில் பழனியாக நடித்ததன் மூலம் தொடங்கியது
தொடர்ந்து சன் மியூஸிக் சேனலில் கல்லூரி காலம், சுட சுட சென்னை, ஃப்ரீயா விடு, காஃபி டீ ஏரியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல்
தொடர்ந்து விஜய் டிவிக்கே சென்ற ரியோ, சரவணன் மீனாட்சி சீசன் 3 சீரியலில் நடித்தார். மேலும் ரெடி ஸ்டெடி போ (சீசன் 1 மற்றும் 2), வொய்ப் கைல லைஃப் மற்றும் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அந்தப் படம்
ஜோடி நம்பர் ஒன் சீசன் 9 என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். ரியோ தமிழ் சினிமாவில் ‘சத்ரியன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரும் பிரபலமானார்.

முதல் நபராய்
ரியோவுக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து கடைசி வரை குழப்பமாக டிவிட்டி வந்த ரியோ ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதுவும் முதல் நபராய் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கக்கூஸுக்கு திறப்பு விழா
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள ரியோ ஒவ்வோரு இடமாய் சுற்றிப்பார்த்த ரியோ, கக்கூஸுக்கும் திறப்பு விழா நடத்தியுள்ளார். போன வேகத்தில் பெட்ரூமில் இடம் பிடித்த ரியோ, பேய் பயத்தையும் காட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











