Just In
Don't Miss!
- News
பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா? தனித்துப் போட்டியா?
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளரான ரியோ ராஜ் ஒரு வழியாக ஹேப்பியாகி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டுக்குள் என்டர்டெயினராக நுழைந்த ரியோ வெளியே வரும் போதும் என்டர்டெயினர் விருதுடனே விடைப்பெற்றார்.
லயோலாவில் களைக்கட்டிய மயிலாட்டம்.. ஒயிலாட்டம்.. நாட்டுப்புற கலைகள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
ஆனால், கடைசி வாரத்தில் ரியோ ராஜின் முகம் முற்றிலுமாக சோக மயமாக மாறியது ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தியது.

குடும்பத்தை பிரிந்து
மனைவி மற்றும் பிறந்த குழந்தையை பிரிந்து 105 நாட்கள் எல்லாம் இருக்க முடியுமா? என்றால் அது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் தான். அப்படிப்பட்ட சூழலுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்ட ரியோ ராஜ், கடைசி நேரத்தில் ரொம்பவே மனமுடைந்து சோகக் கடலில் மூழ்கினார்.

ரொம்ப ஹேப்பி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக ரியோ வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாவது ரன்னர் அப் ஆனார் ரியோ. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எல்லோரும் நல்லா இருக்கீங்களா? இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் எனக் கூறி, தனக்காக வாக்களித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மரியாதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலேவை வரை இருந்து வந்த ரியோவும் வெற்றியாளர் தான். வீட்டுக்குத் திரும்பும் போது மாலை மரியாதையுடன் ரியோவுக்கு உற்சாக வரவேற்பை அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் ஏற்பாடு செய்திருந்தனர். பட்டாசு வெடித்து சும்மா பட்டையை கிளப்பினர்.

ரியோவை மாற்றிய ரிதி
ரிதி பாப்பாவின் போட்டோவை பார்த்தே பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரியோ, வீடியோவில் மட்டுமே சில நேரங்களில் குழந்தையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பாசத்தால் பிணைந்த தந்தையான ரியோ ராஜ், வீட்டுக்கு வந்தவுடன் ரிதி பாப்பாவை தூக்கிக் கொஞ்சும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரியோவின் சோகத்தையும் ரிதி ஒரு கணத்தில் மாற்றிவிட்டாள்.
|
ரசிகர்களுக்கு நன்றி
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 எனக்கு ஒரு பியூட்டிஃபுல் ஜர்னியாக இருந்தது. வெளியே வந்து பார்க்கும் போது, இவ்ளோ லவ் மற்றும் சப்போர்ட் கொடுத்த ரசிகர்களால் ரொம்பவே ஹேப்பி ஆகிட்டேன். நிறைய விஷயங்கள் இருக்கு ஒழுங்கா பிளான் பண்ணி பண்ணலாம்னு இருக்கேன் என அந்த வீடியோவில் ரியோ கூறியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
ரியோ ராஜ் சிறந்த என்டர்டெயினராகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார் என்றும் ரியோவின் நல்ல மனசுக்கு வெளியே ரியல் வெற்றி கிடைக்கும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஹேப்பியா இருங்க அண்ணா உங்களை இப்படி பார்க்கத் தான் பிடிச்சிருக்கு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ரியோ நடிப்பில் சீக்கிரமே பிளான் பண்ணி பண்ணனும் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.