குரூபிசம்னு சொன்னாலே ரியோவுக்கு ஏன் அவ்ளோ கோபம் வருது.. ஆரிக்கும் ரியோவுக்கும் தான் இனி போட்டி போல?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரியோவை ஹீரோவாக்கவும் ஆரியை வெளியேற்றவும் விஜய் டிவி முயற்சித்து வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த வாரமும் ஆரியை போரிங் போட்டியாளராக மாற்ற ரியோ முயற்சிப்பது மூன்றாவது புரமோவில் தெரிகிறது.

தங்க பந்து
கடந்த வாரம் தங்க முட்டை டாஸ்க் ஓடிய நிலையில், இந்த வாரம் பந்து பிடிக்கும் டாஸ்க்கிலும் தங்க பந்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் ரியோ முதலிடத்திற்காக பேசிய பேச்சில் காண்டான ரம்யா பாண்டியன், ஒட்டுமொத்த புள்ளிகளுக்கும் வேட்டு வைத்து விட்டார். அதே போல பாலாவுக்கு கேபி பூஜ்ஜியத்தை பரிசளித்தார்.

போரிங் பாலா
ஏற்கனவே ஒருமுறை சுசித்ராவுடன் சேர்த்து பாலாவை போரிங் போட்டியாளராக்கி கண்ணாடி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வாரமும் அனிதா சம்பத், கேப்டனாக பாலா சரியாக செயல்படவில்லை என்றும் ஷிவானிக்கு மட்டும் ஃபேவர் பார்த்தார் என்பதை சொல்லி போரிங் போட்டியாளருக்கு நாமினேட் செய்துள்ளார்.

மீண்டும் ஆரி
இந்த வீட்டில் அதிகமுறை கண்ணாடி சிறைக்கு சென்றவர் என்கிற பட்டத்தை ஆரிக்கு ஹவுஸ்மேட்கள் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியிலும் ஆரி தான் போரிங் என ரியோ சொன்ன நிலையில், அதனை எதிர்த்து ஆரியும் ரியோவும் செய்யும் வாக்குவாதத்தை மூன்றாவது புரமோவில் காட்டி உள்ளனர்.

குரூபிசம்னா கோபம் வந்துரும்
குரூபிசம் பண்ணக் கூடாது என ரூல் புக்கில் போட்டு இருக்கு என ஆரி சொன்னதும், கோபப்பட்ட ரியோ, குரூபிசம் பண்ணக் கூடாதுன்னு எங்க போட்டிருக்கு காட்டுங்கள் என்றார். மாறாக தான் குரூபிசம் பண்ணவில்லை என வாதிடவில்லை. கூட்டமாக விளையாடக் கூடாது என போட்டிருக்கு, அதுக்கு இங்கிலீஷ்ல குரூப்புன்னு தானே அர்த்தம் என்று ஆரி கேட்க அனல் பறக்கிறது.

ஆரியை வெளியேற்ற
ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் தொடர்ந்து ஆரி பிரச்சனையாகவே இருந்து வருகிறார். அவரை வெளியேற்றிவிட்டால் ஈஸியா டைட்டிலை தட்டிச் செல்லலாம் என மற்றவர்களும் பிளான் போட்டு வருகின்றனர். விஜய் டிவியும் தனது செல்லப் பிள்ளைகளில் ஒருவருக்கு டைட்டிலை தூக்கிக் கொடுக்க ஆரி இடையூறாக உள்ள நிலையில், இந்த வாரம் ஆரியை வில்லனாக காட்டி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











