என்னை ஏன் நாமினேட் பண்ணீங்க.. ஆரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பம்மும் ரியோ.. இன்னொரு சண்டை!

சென்னை: வழக்கம் போல இன்றும் ஆரியை சுவாரஸ்யம் இல்லாதவர் என ரியோ தேர்வு செய்ய ஆரி ரொம்பவே கடுப்பாகி விட்டார்.

Recommended Video

சென்னை: ‘அந்த’ கேள்வியை திரும்ப கேட்ட ஆரி… பதில் சொல்லாமல் பதுங்கிய ரியோ…!

ரம்யா பாண்டியனிடம் ரியோ ஆடும் கேம் பற்றி எடுத்து சொன்ன நிலையில், ஆரிக்கும் ரியோவுக்கும் மீண்டும் முட்டிக் கொண்டது.

கண்ணாடி சிறைக்குள் சென்ற பிறகு ரியோவிடம் அவர் விளையாடுவது சரியான கேம் அல்ல என எடுத்து சொல்ல வந்து மீண்டும் பாலாஜி உடன் சண்டை வெடித்தது.

பயங்கர மைண்ட் கேம்

பயங்கர மைண்ட் கேம்

பிக் பாஸ் வீட்டிற்குள் ரியோ ராஜ் ஆரம்பத்தில் இருந்தே பயங்கர மைண்ட் கேம் போட்டு விளையாடி வருகிறார். அர்ச்சனா வருவதற்கு முன்பே அன்பு கேங்கை ஆரம்பித்து வைத்ததே அவரும் நிஷாவும் தான். ஒவ்வொரு வாரமும் யாரை நாமினேட் பண்ணி தூக்குறதுன்னு பக்காவா அவர் தான் பிளான் போட்டு மற்றவர்கள் பேச்சு வாக்குல அப்படியே பதிய வைத்து விடுகிறார்.

சோம் கேபியிடம்

சோம் கேபியிடம்

இந்த வாரமும் சோம் மற்றும் கேபியிடம் ஏற்கனவே ஆரியை பற்றி அழகா போட்டுக் கொடுத்து அவர்களின் மைண்டை மூளைச்சலவை செய்து விட்டார். எப்படி இருந்தாலும், பாலாவையும் ஆரியையும் தூக்கிட்டால் அன்பு கேங்கில் இருந்து ஒருவருக்குத் தான் டைட்டில் என்பதிலும், அதிலும் தனக்குத் தான் கப் கிடைக்கும் என்பதிலும் ரியோ தெளிவாக இருப்பதாக நெட்டிசன்கள் ஏகப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

நிறைய தடவை

நிறைய தடவை

ஆரியை வொர்ஸ்ட் பர்ஃபார்மருக்கும், எவிக்‌ஷனுக்கும் பலமுறை ரியோ ராஜ் நாமினேட் செய்துள்ள தொகுப்பு வீடியோக்களையும் பிக் பாஸ் ரசிகர்கள் எடுத்துப் போட்டு, அவரது உண்மையான முகத்தை கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர். இந்த வாரம் ஆரியை எவிக்‌ஷனுக்கு நாமினேட் பண்ண முடியாத காண்டை ஈடுபாடு குறைவானவர் என சொல்லி தீர்த்துக் கொண்டார்.

கேவலமான கேம்

கேவலமான கேம்

இதுபற்றி ரம்யாவிடம் பேசிய ஆரி, ரியோ விளையாடுவது கேவலமான கேம் என்றும், அன்பு பெட் இன்னும் போகல என்றும் கலாய்த்து பேசிக் கொண்டிருந்தார். எப்படியோ இந்த தகவலும் அந்த டீமுக்கு சென்று விடும் என்பது தெரிந்த விஷயம் தான். அதே போல் நடக்க ஆரிக்கும் ரியோவுக்கும் முட்டிக் கொண்டது.

ஏத்துக்க மாட்றீங்க

ஏத்துக்க மாட்றீங்க

ரியோ ஆடும் கேம் சரியில்லை என்றும், இதை ஒரு நண்பனாக சொல்கிறேன். வெளியே போய் பார்த்தால் உங்களுக்கே புரியும் என்றும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக ஆரி சொன்னதால் கோபப்பட்ட ரியோ, நீங்க சொன்னா நாங்க கேட்கணும், நாங்க சொன்னா ஏன் உங்களுக்கு அதை அக்செப்ட் பண்ணிக்கிற மனசு இல்லை என ரியோ ஆதங்கப்பட்டார்.

பம்மிய ரியோ

பம்மிய ரியோ

என்னை ஏன் இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபார்மர்னு நாமினேட் பண்ணீங்க, என்னை விட அதற்கு யாரும் தகுதி இல்லையா? என்கிற கேள்வியை ஆரி முன் வைத்ததும் பேச முடியாமல் பம்மினார் ரியோ. இன்னைக்கு இருவரும் சண்டை போட்டுக் கொண்டதை பார்த்தேன். அதனால், தான் சொன்னேன் எனக் கூற, இந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்துத் தானே சொல்ல வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X