twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த வார தலைவர் யார்? சீட்டிங் பண்ண கேபி.. கடைசி வரைக்கும் போராடிய ஆரி.. ஊளையிட்ட பாலா!

    |

    சென்னை: போன வாரம் ஆஜீத் கேப்டனாக வந்த நிலையில், இந்த வாரம் கேபி அல்லது சோம் ஆகிய இருவரில் ஒருவர் தான் வருவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நிகழ்ச்சியில் ஒரு நல்ல ட்விஸ்ட் காத்துக் கொண்டிருந்தது.

    என்னடா புரமோவில் வெறும் பாலா புராணமாவே இருந்துச்சே என ஃபீல் பண்ண ரசிகர்களுக்கு நிகழ்ச்சியில் வேறு நல்ல கன்டென்ட்டுகளும் கிடைத்தது.

    கேபி, சோமசேகர், ஆரி, ரியோ, அர்ச்சனா மற்றும் சம்யுக்தா ஆகிய ஆறு பேர் தலைவருக்கான போட்டியில் பங்கேற்றனர்.

    பாத்ரூம் டோரை அடித்து உடைத்த பாலா.. கையில் ஆணிக் குத்தி.. ரத்தமே வந்துடுச்சு.. தவித்து போன ஷிவானி!பாத்ரூம் டோரை அடித்து உடைத்த பாலா.. கையில் ஆணிக் குத்தி.. ரத்தமே வந்துடுச்சு.. தவித்து போன ஷிவானி!

    காலக் கணினி

    காலக் கணினி

    மணிக்கூண்டு டாஸ்க்கில் காலத்தை சரியாக கணித்து முதல் இரண்டு இடத்தை பிடித்த ஆறு போட்டியாளர்கள் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க முடியும் என பிக் பாஸ் பணித்து விட்டார். அர்ச்சனா, சம்யுக்தா, சோமசேகர், ஆரி, ரியோ மற்றும் கேபி என ஆறு பேரும் போட்டி போட களத்தில் இறங்கினர்.

    என்ன போட்டி

    என்ன போட்டி

    கேப்டன் என்ற டைட்டிலுடன் இருக்கும் தங்கள் போட்டோவை கிழே விழாமல் உடம்பில் ஒட்டாமல் கொடுக்கப்பட்ட கட்டையில் பிடித்தபடி நடக்க வேண்டும், நிற்க வேண்டும். யார் நிறைய நேரம் தாக்கு பிடிக்கிறார்களோ அவரே அடுத்த வார தலைவர் என பிக் பாஸ் டஃப் ஆன பிசிக்கல் டாஸ்க்கை கொடுத்தார்.

    நமக்கு செட் ஆகாது

    நமக்கு செட் ஆகாது

    பிசிக்கல் டாஸ்க்குக்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதை தெரிந்து கொண்ட அர்ச்சனா அக்கா, இரண்டு அடி எடுத்து வைத்த நிலையில், டக் அவுட்டாகி உடனடியாக பெவிலியன் திரும்பினார். நான் ஏற்கனவே கேப்டனா இருந்துட்டேன் வேற யாராவது இருக்கட்டும் என கெத்தாக விட்டுக் கொடுத்தது போல் சீன் போட்டு தப்பித்துக் கொண்டார்.

    நான் டம்மி மம்மி தான்

    நான் டம்மி மம்மி தான்

    பாலாஜி முருகதாஸ் தயவால தான் ஏற்கனவே ஒரு வாட்டி தலைவர் டாஸ்க்கில் ஜெயிச்சேன். நான் டம்மி மம்மி தான் என சில நிமிடங்களிலேயே சம்யுக்தாவும் அவுட்டாகி ரிட்டர்ன் ஆகிட்டார். மற்ற போட்டியாளர்கள் ரொம்பவே சூப்பராக அந்த டாஸ்க்கை விளையாடி வந்தனர்.

    சீட்டிங் பண்ண கேபி

    சீட்டிங் பண்ண கேபி

    கேபி நல்லா தனது நெஞ்சு பகுதியில் கட்டையை முட்டுக் கொடுத்து விளையாடியதை, அந்த நேரத்திலும் கவனம் சிதறாமல் கண்டுபிடித்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஆரி, கேபி, உங்க மேல படுதுன்னு கரெக்ட்டா சொன்னார். ஆனால், இல்லையே படலையே.. அது நிழல்.. உங்களுக்கு அப்படி தெரியுதுன்னு நல்லாவே சீட்டிங் பண்ண கேபியால் அடுத்த சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் அவுட் ஆனார்.

    இந்த முறையும் மிஸ்ஸிங்

    இந்த முறையும் மிஸ்ஸிங்

    சோமசேகர் இந்த முறையாவது பிசிக்கல் டாஸ்க்கில் வின் பண்ணி தலைவர் ஆகிடுவாரான்னு ஆவலோடு காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அவரும், ஒரு கட்டத்திற்கு மேலே தாக்குப் பிடிக்க முடியாமல் தனது கேப்டன் பதவியை ஒரே அடியாக கவிழ்த்து விட்டார்.

    ஊளையிட்ட பாலா

    ஊளையிட்ட பாலா

    ஆரி மறுபடியும் கேப்டனாக வந்து நம்மை வெளுத்து வாங்குவாரோ என பயந்த பாலாஜி முருகதாஸ், ஜெயிலுக்கு உள்ளே இருந்து கொண்டு, எல்லாம் தெரிந்தது போல, ஆரி புரோ உங்க மேலயும் படுது புரோ என ஊளையிட்டார். ஆனால், அதை யாருமே பெருசா எடுத்துக் கொள்ளவில்லை.

    ஹீரோ ரியோ

    ஹீரோ ரியோ

    ஆரியும் ரியோவும் ஒன் டு ஒன் வார் நடத்திக் கொண்டு இருந்த நிலையில், ரியோ ராஜ் ரொம்பவே சோர்ந்து போனார். அப்போ ரம்யா பாண்டியன், ஹீரோ மாதிரி இருக்கீங்க என ஊக்கம் கொடுக்க உடனே எழுந்து நின்று சிறப்பாக தனது ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தார். கடைசி நேரத்தில் நூலிழையில் ஆரி மிஸ் பண்ண மீண்டும் தலைவரானார் ரியோ. எல்லாம் ரம்யா பாண்டியனின் பூஸ்ட் தான் காரணம்.

    Recommended Video

    பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
    இரண்டாம் முறையாக

    இரண்டாம் முறையாக

    இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக ரியோ ராஜுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது. முதல் முறை கேப்டன் பதவியின் போது, பாலாஜி முருகதாஸ், ரியோவை தூக்கி சுமந்து அவருக்கு தலைவர் பதவியை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கூட ஆரி, வெயிட்டான வேல்முருகனை தூக்கிச் சுமந்து கடைசி வரை டஃப் கொடுத்தார்.

    English summary
    Rio Raj once again won captaincy task in Bigg Boss Tamil season 4. He will be the next week captain of the Bigg Boss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X