ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் படப்பிடிப்பு முடிந்தது.. விரைவில் படத்தின் பெயர்

சென்னை: ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

திரையின் மீது காதலும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

Rio Raj, Ramya Nambeesan shoot completed

படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்த கொண்டார் பத்ரி. இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழு தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

Rio Raj, Ramya Nambeesan shoot completed

சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை இப்போது ஆரம்பித்துள்ளோம். விரைவில் படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம் என்றார்.

Rio Raj, Ramya Nambeesan shoot completed

இப்படம் ரசிகர்களை ஈர்க்கும் குறிப்பிடதக்க பல அம்சங்கங்களை கொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதி 125 தொழிற்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இடங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.

Rio Raj, Ramya Nambeesan shoot completed

ராஜேஷ் குமார் மற்றும் எல். சிந்தன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இளைஞர்களின் இசை நாயகன் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X