Aan Paavam Polladhadhu X Review - ஆண் பாவம் பொல்லாதது ட்விட்டர் விமர்சனம்.. படம் பட்டைய கிளப்புது

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ரியோ ராஜ். இப்போது ஆண் பாவம் பொல்லாதது என்ற படத்தில் நடித்திருக்கிறார். படமானது இன்று திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கும் நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் முன்வைத்திருக்கிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து கலை பயணத்தை ஆரம்பித்த ரியோ ராஜ் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த அவர் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் ஆகியவைகளிலும் கலந்துகொண்டார். இப்படிப்பட்ட சூழலில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் லீட் ரோலில் நடித்து ஹீரோ பயணத்தை தொடங்கினார்.

நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த ஜோ: அவர் நடித்த படங்களில் ஜோ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த நிறம் மாறும் உலகில் உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. இப்போது அவர் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ஆண் பாவம் பொல்லாதது படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார்.

Rio Raj s Aan Paavam Polladhadhu Twitter Review Movie Receives Positive Reviews

பத்திரிகையாளர்கள் காட்சி: இன்று திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இதுவரை ஆண்களின் பேசப்படாத பக்கங்களை இப்படம் பேசியிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் முன்வைத்திருக்கிறார்கள். படம் பார்த்த இவர், "ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.75 மதிப்பெண் கொடுக்கலாம். புதிதாக திருமணமான ஜோடியை பற்றி படம் பேசுகிறது. ரியோ மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மாளவிகா மனோஜ், ஆர்ஜே விக்னேஷும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் தனது வேலையால் பேச வைத்திருக்கிறார். வின்னர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் படம் வின்னர்: படம் பார்த்த இன்னொருவர், ' ஆண் பாவம் பொல்லாதது வின்னர். ஜோ படத்துக்கு பிறகு ரியோ - மாளவிகா ஜோடி க்ளிக் ஆகியிருக்கிறது. ப்ரீ இன்ட்டெர்வலில் பேசப்படும் விஷயம் பயங்கரமாக சிரிக்க வைக்கிறது. ஆர்.ஜே.விக்னேஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். சிறந்த நடிகராக அவர் கொண்டாடப்படுவார். அறிமுக இயக்குநர் கலையரசன் அனைவருக்கும் கனெக்ட் ஆகும்படியான படத்தை எடுத்திருக்கிறார். இசையமைப்பாளரும் நன்றாக செய்திருக்கிறார். ஐந்துக்கு 3.75 மதிப்பெண் கொடுக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

மிகப்பெரிய வெற்றி பெறும்: சீனியர் பத்திரிகையாளரான கயல் தேவராஜ், 'ஜோ படத்துக்கு பிறகு ரியோ, மாளவிகா காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. சந்தேகமே வேண்டாம். ஆண் பாவம் பொல்லாதது படம் மிகப்பெரிய வெற்றி பெறும்" என்று புகழ்ந்திருக்கிறார்.

மேலும் இன்னொருவர், "5க்கு 3.75 மதிப்பெண் கொடுக்கலாம். சிவக்குமார் முருகேசன் ஸ்க்ரிப்ட். இயக்குநர் திறமை படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஜாலியாக சிரித்து ரசித்துவிட்டு வரலாம்" என கூறியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X